Monday 8 July 2013

ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஜூலை 8 திங்களன்று துவங்குகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத் தான தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவரும், நவீன இந்தியாவின் தலை சிறந்த அரசியல் தலைவருமான மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஜூலை 8 திங்களன்று துவங்குகின்றன.கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நூற் றாண்டுத் துவக்க விழாவில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இடது முன்னணி தலைவர் பிமன்பாசு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியுவும் ஜோதிபாசு நூற்றாண்டு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன.

No comments:

Post a Comment