Thursday, 21 March 2019

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி ! BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளரும், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான தோழர். எம். முருகையா சமீப கால உடல் நலக் குறைவினால் பாதிக்கப் பட்டு, 21.3.2019 அன்று மாலை காலமானார் என்ற துயரச் செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடிமட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடியவரும், பொதுவுடைமைக் கொள்கையில் உறுதியோடு இருந்தவருமான தோழர். முருகையாவுக்குச் செவ்வணக்கம் !

Monday, 18 February 2019


திருநெல்வேலி மாவட்டத்தில் 18/02/2019 முதல் நாள் வெற்றி கரமன வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Saturday, 16 February 2019

பத்திரிகை யாளர்கள் சந்திப்பு
  16/02/2019 அன்று   திருநெல்வேலி மாவட்டத்தில் 3நாட்கள் நடைபெற்ற உள்ள போரட்டத்தை  முன்னிட்டு பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்


மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்


4ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.        S. செல்லப்பா......
**(***(**

16 Feb 2019  

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில், 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்ககூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எஸ்.செல்லப்பா, தலைவர் கே.நடராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இணையதளத்தின் இன்றைய நிலை 4ஜி அலைக்கற்றையை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தவகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை 3 முறை சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செல்போன் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு அவர்களுக்கு சலுகைகளையும் மத்தியஅரசு அறிவித்து வருகிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தொழிலை விரிவுபடுத்த முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது. வங்கிகளில் கடன் வாங்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு, பிஎஸ்என்எல் கடன் வாங்க தடை விதிக்கிறது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, 27 January 2019

மாவட்ட மாநாடுதிருநெல்வேலி மாவட்டBSNL ஊழியர் சங்க மாவட்ட மாநாடு பாபநாத்தில் இன்று (25/01/2019 ) நடைபெறது

BSNLEU புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள். 
   தலைலர். S.ராஜகோபல்.   பணகுடி          
   துணைத் தலைவர் கள்.     
             1E. நடராஜன்    வடகரை. 
          .2. V. சீதாலட்சுமி . GM o
   3.SK.மாரியப்பன். புளியங்குடி.
 4 P. சூசை பாளை.   
     மாவட்டச்செயலர்.  N. சூசை மரிய. அந்தோணி.                   உதவிசெயலர்கள்.      1.E.டேனியல்முத்துராஜ். GM  o
2.P ராஜகோபல் நெல்லை.                       3.V.ஆண்டபெருமாள்  அம்பை.                            4.மோகன்குமார்.  தென்காசி.
 பொருளாளர்
S சங்கரநாராயணன். நெல்லை.                      உதவிபொருளாளர்.     ஆறுமுகபாண்டி வள்ளியூர.                      
அமைப்புசெயலர்கள்.
1M.முருகேசன்.  பாவூர்சத்திரம்.              2.கல்யாணி பாளை.                
3.T.s.பாலசுப்பிரமணியன்  சேரன்மாதேவி.              4. குத்தலிங்கம் திருவேங்கடம்.            
 5.S. ராமசுப்பு.. தென்காசி.               
    6  . செந்தில். திசையன்விளை.       
          7. நாசர்தீன். Vkபுதூர்.   
 ஆடிட்டர் v. பாலசுப்பிரமணியன் அனுவிஜய் செட்டிகுளம்

Saturday, 19 January 2019

Monday, 10 December 2018

வெற்றிக்கு ஆயிரம் சொந்தம்...

வெற்றிக்கு ஆயிரம் சொந்தம்...

வெற்றிகு ஆயிரம் சொந்தம் இருக்கும். ஆனால் தோல்வி அனாதையாக நிற்கும்என்று ஒரு பேச்சு மொழி உள்ளது. இது சரி என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. BSNL ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தில் AUAB ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றம் நடைபெற்ற பின்னரே ஓய்வூதியர்கள், ஓய்வூதிய மாற்றத்தை பெறுவார்கள் என தொலை தொடர்பு துறை இதுவரை நிலைபாடு எடுத்திருந்தது. இதன BSNL CMDக்கு எழுத்து பூர்வமாகவே தொலை தொடர்பு துறை தெரிவித்திருந்தது. பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தோடு, ஓய்வூதிய மாற்றத்தை இணைக்கக்கூடாது என BSNL ஊழியர் சங்கம் ஒரு உறுதியான நிலை எடுத்திருந்தது. இதனை போலவே வேறு பல அமைப்புகளும் நிலை எடுத்திருந்தன. ஆனால் AUAB கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் மூலமாகவே இந்த பிரச்சனை தீர்வு காணப்பட்டுள்ளது என அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் உள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்காக நடத்திய கடுமையான தயாரிப்பு பணிகள் அரசுக்கு கொடுத்த பெரும் நெருக்கடி காரணமாகவே தொலை தொடர்பு செயலாளர் 02.12.2018 அன்று AUAB தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் தான் ஓய்வூதிய மாற்றத்தை பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் இருந்து பிரித்து பார்க்கப்படும் என தொலை தொடர்பு துறை முடிவெடுத்துள்ளதாக தொலை தொடர்பு துறை செயலாளர் முதன் முறையாக தெரிவித்தார். இது தான் நடந்த உண்மை. எனினும், நாடு முழுவதும் உள்ள ஊழியர்களும் அதிகாரிகளும் AUABயின் தலைமையில் எடுத்த கடும் முயற்சிகளை அங்கீகரிக்காமல் ஒரு சிலர் இது தங்களின் வெற்றி எனக் கூறுவது நகைப்பிற்குரியது.