Sunday 3 September 2023

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரி வந்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான கடிதங்களையும் எழுதி வந்துக் கொண்டுள்ளது.

29.08.2023 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, RESTRUCTURING பிரிவையும் கூடுதலாக கவனிக்கும் திருமிகு அனிதா ஜோஹ்ரி, PGM(SR) அவர்களை சந்தித்து, விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றும் பணியினை உடனடியாக துவக்கி, விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

BSNL WWCC METTING


2 நாட்கள் நடைபெறும் BSNL WWCCயின் விரிவடைந்த கூட்டம், புது டெல்லியில், 02.09.2023 அன்று துவங்கியது.
2 நாட்கள் நடைபெற உள்ள BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 02.03.2023 அன்று காலை 11.00 மணிக்கு துவங்கியது. புதுடெல்லி K.G.போஸ் பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரமா தேவி தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N.ஜோதி லட்சுமி, வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஊதிய மாற்றம், BSNLன் 4G / 5G துவக்குவதில் உள்ள கால தாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் நிலை பற்றி உரையாற்றினார். BSNL நிறுவனம், நஷ்டமையும் நிறுவனமாக மாறுவதற்கு காரணமான, BSNLஐ பாரபட்சமாக நடத்தும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விரிவாக பேசினார்.

உணவு இடைவேளைக்கு பின், பங்கேற்ற தோழர்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.