Wednesday 17 July 2013

அனைத்திலும் அந்நியர்

அனைத்திலும் அந்நியர்
தொலை தொடர்பில் 100 சதவீதம் ; காப்பீட்டு துறையில் 49 சதவீதம்


தொலை தொடர்புத் துறையில் 100 சதவீத அந் நிய முதலீட்டை(எப்.டி.ஐ) அனுமதிப்பது என காங்கி ரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோன்று காப்பீட் டுத்துறையில் அந்நிய முத லீட்டு வரம்பை 49 சதவீத மாக அதிகரிக்கவும் பிரத மர் மன்மோகன் சிங் தலை மையில் செவ்வாய்க்கிழமை கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் பொருளா தாரத்தை மீண்டும் அதிகரிப் பதற்கு அந்நிய முதலாளிகள் அதிக அளவில் வர வேண் டும் என தினமும் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொலை தொடர்புத் துறையை மொத்தமாகத் தூக்கி அந்நியர்களின் கையில் கொடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்கனவே எப்.டி.ஐ முதலீடு 74 சதவீதம் வரை அனுமதிக்கப்பட் டது. பாதுகாப்புத்துறை, காப்பீடு, பொருட்கள் பரி வர்த்தனை, மின் பரிவர்த் தனை துறைகளிலும் அந் நிய முதலீட்டை அதிகரிக்க எப்.டி.ஐ விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறையில் தற் போது 26 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகி றது. இதை மேலும் கூடுத லாகக்கிட பாதுகாப்பு மீதான தொடர்பான ஆய்வு செய்து அதிகரிக்கப்பட்ட அளவிற்கான அனுமதியை தெரிவிக்கும்.காப்பீட்டுத்துறையில் தற்போது 26 சதவீதம் எப் டிஐ அனுமதிக்கப்படுகிறது. இந்த முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அதிக்கரிக்க பிர தமர் தலைமையிலான கூட் டம் ஒப்புதல் தந்துள்ளது.
இந்தகூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகள் அமைச் சரவையில் தெரிவிக்கப் படும். தொலை தொடர்புத் துறையைப்போல, கட்டுமா னக் கம்பெனிகளின் எப்.டி. ஐ முதலீடு 49 சதவீதத் தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் தற்போது உள்ள 49 சதவீத எப்.டி.ஐ முதலீடு 100 சதவீதமாக அதி கரிக்கப்படுகிறது.பொருளாதார விவகா ரங்களுக்கான அமைச்சர வைக் கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட இந்த முடிவுகளை செவ்வாயன்று இரவு அமைச்சர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேற்படி கூட்டத்தில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, அமைச்சர் ப.சிதம் பரம், பாதுகாப்பு அமைச் சர் ஏ.கே.அந்தோணி, பெட் ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, மற்றும் மின்து றை இணையமைச்சர் ஜோ திர் ஆதித்யா சிந்தியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.
சிஐடியுகடும் கண்டனம்
மத்திய அரசின் இந்த முடிவுக்கு சிஐடியு கடும் கண் டனம் தெரிவித்துள்ளது. சிஐ டியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி., விடுத் துள்ள செய்தியில், ஒட்டு மொத்த நாட்டையும் தற்கொ லைப் பாதைக்கு தள்ளி யுள்ள அரசின் இந்த முடி வை எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் உறுதியுடன் போராட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவை அடகு வைக்காதே!
மன்மோகன் அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை
-
நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்தி டம் அடகுவைக்கும் வேலையை காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:ஐ.மு.கூ அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திடம் அடகு வைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம் பை அதிகரித்திடவும், சில துறைகளில் சில வழிக ளின் மூலம் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கும் அனுமதித்துள்ளது. மிகவும் கடுமையான முறையில் பொருளாதார நிர்ப்பந்தங்களை எதிர்கொண்டிருக்கும் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையிழந்த நிலையில் இத் தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
தொலைத்தொடர்புத் துறையில் அடிப்படையான மற்றும் செல்போன் சேவைகளில் அந்நிய நேரடி முத லீட்டை நூறு விழுக்காடு உயர்த்திட ஐ.மு.கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி யில் 26 விழுக்காட்டிற்கும் மேலாக அந்நிய மூலதனத் திற்கு அனுமதி அளித்திடும் முடிவானது மிகவும் கடு மையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். நாட்டின் கேந்திரமான பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையை அந்நியர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இது வழிவகுத்திடும்.தற்போது மிகவும் விரிவான முறையில் ஏற்பட் டுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிக்கட் டுவதற்கு வேண்டி, அந்நிய மூலதனத்தை மேலும் கவர்வதற்காக அரசாங்கம் இத்தகைய திவாலாகிப் போன கொள்கையைத் தூக்கிப் பிடித்துள்ளது. ஆனால் அந்நிய மூலதனத்திற்கு வெண்சாமரம் வீசும் அரசின் இத்தகைய கேவலமான அணுகுமுறை நாட்டின் செல்வம் கொள்ளை போவதற்கு மேலும் வாய்ப்புவாசல்களை ஏற்படுத்திடும். ஏற்கனவே அரசாங்கம், வோடாபோன் நிறுவனம் அரசுக்குத் தர வேண்டிய மூலதன ஆதாயங்கள் வரியை பெறமுடியா மல் கைவிட்டுவிட்டது. அதேபோன்று பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தற்போதுள்ள விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இது உள் நாட்டுத் தொழில்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும்.இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட் டை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் நாடாளுமன் றத்தில் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றுவதன் மூலமே செய்திட முடியும். நாடாளுமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர எதிர்க்கட்சிகளும் அரசின் இம்முடிவைத் தோற்கடிப்பார்கள்.அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திட மேற்கொண்டுள்ள இத்தகைய முயற்சிகளை அரசாங் கம் தொடரக்கூடாது என்று அரசியல் தலைமைக்குழு வற்புறுத்துகிறது.

No comments:

Post a Comment