Wednesday, 31 July 2013

குறைந்தபட்ச ஊதியம்


BSNL  நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது அகில இந்திய தலைவர் தோழர் நம்பூதிரியின் பேட்டி படிக்க :CLICK HERE

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா உயர்வு

வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரி செலுத்துவோரின் வசதிக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நமது பொது செயல

ஜப்பானில் நமது பொது செயலர்

அணுகுண்டுக்கு  எதிராக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் 03-08-2013 முதல் 09-08-2013 வரை நடைபெற உள்ள  உலக மாநாட்டில் கலந்து கொள்ள நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள்  01-08-2013 அன்று ஜப்பான் செல்ல உள்ளார்.தோழர் அனிமேஷ் மித்ரா, துணை பொது செயலர் 01-08-2013 முதல் 11-08-2013 வரை பொறுப்பு பொது செயலராக பணியாற்றுவார்.  

ஆகஸ்ட் மாத தேசிய கருத்தரங்கங்கள்

ஆகஸ்ட் மாத தேசிய கருத்தரங்கங்கள்- சுற்றறிக்கை எண்:74 August National conventions
Read | Download

போராட்டமும் பேச்சு வார்த்தைகளும்

போராட்டமும் பேச்சு வார்த்தைகளும் - சுற்றறிக்கை எண்:73 STRUGGLE AND NEGOTIATIONSRead | Download

நாசகர வேலை தொடரும் ப.சிதம்பரம் பேட்டி


நாசகர வேலை தொடரும் ப.சிதம்பரம் பேட்டி

புதுதில்லி, ஜூலை 31-அந்நிய முதலீட்டை மேலும் வரவேற்கும் வகை யில் நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று மத்திய நிதி 
யமைச்சர் ப.சிதம்பரம் கூறி யுள்ளார்.நிதியமைச்சராக மீண் டும் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர் ந்து 

புதுதில்லியில் செய்தியா ளர்களிடம் அவர் பேசி னார்.நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதத்திலி 

ருந்து 6 சதவீதமாக உயரும் என்ற வழக்கமான பல்லவி யை அவர் பாடினார். அத்தி யாவசியமல்லாத ஆடம் பரப் பொருட்களின் இறக்கு மதியை குறைக்கும் வகை யில் வரி அதிகரிக்கப்படும் என்றும், ஏற்றுமதியை ஊக் குவிப்பதற்கான 

நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறி னார்.
ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைத் தடுக்க திட்டவட்டமான நடவடிக் கைகள் எதுவும் உடனடி யாக எடுக்கப்படாது என்ற 


போதும், அதற்கான முயற்சி தொடரும் என்றார்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு புதனன்று 61.21 ஆக இருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறி னார். அதே நேரத்தில் பல் வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடரும் என்று ப.சிதம் பரம் கூறினார்
.ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் நடப்பு கணக் கில் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இந்தப் பற்றாக் குறையை குறைக்காவிட் டால் கடும் விளைவுகள் ஏற் படும். ஏற்கனவே வெளி நாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. இந்நிலை யில் நடப்புக் கணக்கு பற் றாக்குறையை கட்டாயம் குறைத்தே ஆக வேண்டிய தேவை உள்ளது என்று ப. சிதம்பரம் கூறினார்.தங்க இறக்குமதியை குறைக்க மேலும் நடவடிக் கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவ தாகவும் அவர் கூறினார்.

Tuesday, 30 July 2013

அவ்விரு தேசங்களுக்கு நேசப்பூர்வ வாழ்த்துக்கள்!

அவ்விரு தேசங்களுக்கு நேசப்பூர்வ வாழ்த்துக்கள்!

நமது நாட்காட்டியில் நகர்ந்து சென்ற ஜூலை 26, 27 தேதிகள் வழக்கமான நாட்களைப் போல் அல்லாமல்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை. இவ்வுலகையே அதிரச் செய்த குறிப் பிடத்தக்க நிகழ்வுகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில் கியூபாவிலும், வட கொரியாவிலும் அந்த வரலாறு நடந்தேறியது. சோசலிச கியூபாவின் புரட்சிக்கு வித்திட்ட `மன்காடா ராணுவ அரண் மீதான தாக்குதல்’ துவங்கிய நாள் 1953 ஜூலை 26. சோசலிச வடகொரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடூரமான யுத்தம் முறியடிக்கப்பட்ட நாள் 1953 ஜூலை 27.60ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களால் இவ்விரு நாடுகளையும் அழித் தொழித்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி யாக செயல்பட்டுக் கொண்டு, கியூப மக்களை நசுக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி பாடிஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறியும் நோக்கத்துடன் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ தலைமை யில் ஒன்றிணைந்த இளந்தொழிலாளர்கள், மாணவர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் என சமூ கத்தின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து உருவாக்கிய புரட்சிகரக் குழு கியூபாவின் சாண்டியாகோ நகரில் உள்ள மன்காடா ராணுவ அரண் மீதும், பயாமோ நகரில் உள்ள கர்லோஸ் மனுவேல் ராணுவ அரண் மீதும் நடத்திய அந்த முதல் தாக்குதலின் உத்வேகம் இன்றும் கியூப இளைஞர்களிடையே, கியூபத் தொழிலாளர்களி டையே கனன்று கொண்டிருக்கிறது.
1945ல் உதயமான கொரிய மக்கள் ஜன நாயகக் குடியரசு(வடகொரியா) சோசலிசப் பாதையில் முன்னேறத் துவங்கியதைப் பொறுக்க முடியாமல் அந்த நாட்டின் மீது 1950ல் படை யெடுத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம். வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே திட்டமிட்ட யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது. மூன்றாண்டுகள் நடந்த கொரிய யுத்தத்தில் தனது கைக்கூலியான தென்கொரிய ராணு வத்திற்கு முழுமையாக ஆயுதம் சப்ளை செய்தது அமெரிக்கா. வடகொரியாவின் தலைநகர் பியாங் யாங்கில் மட்டும் 4லட்சத்து 28 ஆயிரத்து 748 குண்டுகளை வீசியது அமெரிக்கா. இந்தக் கொடிய யுத்தத்தில் 40லட்சத்திற்கும் அதிகமான தங்களது சகோதரர்களைப் பலி கொடுத்து, தங்கள் தேசத்தை மீட்கப் போராடினார்கள் வர லாற்றுச் சிறப்புமிக்க வடகொரிய மக்கள். சோசலிசப் புரட்சியின் தலைவர் தோழர் கிம் இல் சுங் தலைமையில் வடகொரிய மக்கள் வெளிப்படுத்திய அப்பழுக்கற்ற தேசபக்தியை மீறி அமெரிக்க ராணுவத்தால் மேலும் முன்னேற முடியவில்லை.
வேறு வழியின்றி 1953ம் ஆண்டு ஜூலை 27ந்தேதி போரை நிறுத்திக் கொள்வ தாக ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. இன்னுயிரை ஈந்து வெற்றிகொண்ட புரட்சியை இன்றளவும் உறுதியோடு பாதுகாத்து வருகிறது வடகொரியத் தொழிலாளர் கட்சி.உலகையே விழுங்கத்துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சின்னஞ்சிறிய நாடுகள் என்றபோதிலும், தங்கள் உயிரினும் மேலான சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடித்து பீடுநடை போடும் சோசலிச கியூபாவை யும், சோசலிச வடகொரியாவையும் உளப்பூர்வ மாக வாழ்த்துவோம்!

திருநெல்வேலி மாவட்டம் ##### மாவட்ட செயற்குழுகூடம்.

    BSNL ஊழியர் சங்கம்
               திருநெல்வேலி மாவட்டம்
                  மாவட்ட செயற்குழுகூடம்.
----------------------------------------------------------------------------------------------------
தலைமை.;தோழர்.N.சூசை மரிய அந்தோணி. மாவாட்ட தலைவர்.
நாள்;      05;08/2013.திங்கள்கிழமை காலை 10 மணி
இடம்;    நவஜுவன் டிர்ஸ்ட்...வீரமாணிக்கபுரம்.திருநெல்வேலி
வரவேற்புரை’ தோழர்’;S.செல்லத்துரை மாவட்ட அமைப்பு செயலர்
                                                       பொருள்
1 மத்தியசங்க செயற்குழு முடிவுகள் (தொடர் தர்ணா21.08.2013 to
      23.08.2013,&04/09/2013. ஒருநாள் வேலைநிறுத்தம்)
2. மாவடட் மட்ட பிரச்சனைகள்
3. நிதிநிலைமைகள்
4.. தலைவர். அனுமதியுடன் பிற.
            சிறப்புரை
      தோழர் .D. கோபாலன். மாநில அமைப்பு செயலர்
நன்றியுரை; தோழர் P.இராஜகோபால்.மாவட்ட உதவிச் செயலர்
                               தோழமையுடன் C.சுவாமிகுருநாதன்

                    மாவட்ட செயலர்        திருநெல்வேலி

தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு



          பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம்செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவைமாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
          தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வதுமாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் 2013 ஜூலை 21 ஞாயிறன்றுநடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் மற்றும் மாநாட்டுவரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
          முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியைஎஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்ததலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன்என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை(http://tntcwucbt.blogspot.in/ http://tntcwu.blogspot.in/) தொடங்கிவைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர்எம்.முருகையா தொடக்க உரையாற்றினார்.
          இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழுஉறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர்எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் .முகமது ஜாபர் ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
          இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன்,பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாக குழுதேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Courtesy for source : http://tntcwu.blogspot.in/