Thursday 17 October 2013

மாற்று அணி மலருமா?



மாற்று அணி மலருமா?

ariaravelan Kanagasabapathy | Change.org

www.change.org/e
அவன் ஓர் அடிமை. இளவரசியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். செய்தியை அரசன் அறிந்தான். வட்டரங்கின் நடுவில் அடிமை நிறுத்தப்பட்டான். அரசன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அரங்கின் அடுக்கு இருக்கையில் மக்கள் அமர்ந்து இருந்தார்கள். முழுவதும் மூடப்பட்ட இரண்டு பெரிய கூண்டுகள் வட்டரங்கிற்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றினுள் அவன் காதலியும் மற்றொன்றில் பலநாள்களாகப் பட்டினிகிடக்கும் சிங்கமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கூண்டுகளில் ஒன்றை அடிமை திறக்க வேண்டும் என்றும் திறக்கப்படும் பெட்டிக்குள் காதலி இருந்தால், அவளை அவன் மணந்துகொள்ளலாம் என்றும் சிங்கம் இருந்தால் அதற்கு அவன் இரையாக வேண்டும் என்றும் அரசன் அறிவித்தான். அடிமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தான். நல்லவேளையாக அதற்குள் சிங்கம் இல்லை; ஆனால் உள்ளே இருந்த கொடிய நஞ்சினையுடைய கருநாகம் ஒன்று அந்த அடிமைக் கொத்துவதற்காக சீறிக்கொண்டு வந்தது. உயிர்பிழைக்க வேண்டும் என்னும் தவித்த அடிமை மற்றொரு பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்த சிங்கம் வெளியே வந்து அவனைத் துரத்தத் தொடங்கியது.

இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே திங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்து இந்திய நாட்டைக் காப்பது என்னும் குழப்பம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்து இருக்கிறது.



ஒருபக்கம் ஊழல் சாக்கடையில் ஊறி சொரணையே அற்றுப்போன, இந்திய தேசிய காங்கிரசின் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; மறுபக்கம் இந்தியாவின் இனப்படுகொலை நாயகனான நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கும் இராசுடிரிய சுயம் சேவக்கு (ஆர்.எசு.எசு.) அமைப்பின் அரசியல் அமைப்பான பாரதிய சனதா கட்சியின் தலைமையிலான வலதுசாரிகளின் கூட்டணி. எனவே இந்திய வாக்காளர்கள், தம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள வேண்டியவர்கள் ஊழல்வாணர்களா, மதவெறியர்களான காவிபயங்கரவாணர்களா என்பதனை முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். .......




No comments:

Post a Comment