Saturday, 23 April 2016

நெற்றியடி




 நெற்றியடி





BSNL  நிர்வாகத்தின்  06 04 2016  தேதியிட்ட கடிதத்திற்கு

BSNL ஊழியர்  சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P. அபிமன்யுவின் 

நெற்றியடி பதில்

1.            முதன்மை அங்கீகார பிரதிநிதித்துவ சங்கமான BSNL ஊழியர் சங்கம், தொழிலமைதி குலைவதற்கான நிலைமையை உருவாக்கியது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குகின்ற வகையில் BSNL   நிர்வாகத்தின் கடிதம் உள்ளது என்பது, மிகவும் துரதிருஷ்டமானது. 

2.            இது முற்றிலும் உண்மைகளுக்கு புறம்பானதாகும். 

3.            தற்போது சுமுகமற்ற சூழல் உருவாக்கப்பட்டது வேறு யாராலுமல்ல ;  BSNL நிர்வாகத்தால்தான் என்பதுதான் உண்மை.

4.            ஒரே ஒரு நாள் முன்பாக தகவலளித்துத்தான் இக்கூட்டம் கூட்டப் பட்டது என்பதே உண்மை.  இது போன்ற நிகழ்ச்சிகள் இதற்கு முன்பு நடந்ததேயில்லை.

5.            BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத தனது நிலையைத் தெரிவித்த பின்னரும், 30.3.2016 அன்று,  BSNL நிர்வாகத்தால் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. 
.
6.            BSNL நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, அநீதியானதும் ஒழுங்கு விதிகளை மீறுவதுமாகும்.

7.            ஒரே ஒரு நாள் முன்பாக தகவலை அளித்து PLI குழு கூட்டம் அவசரமாக ஏன் நடத்தப் பட்டது என்பது குறித்து ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் BSNL நிர்வாகம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. 

8.            மிக மிகக் குறுகிய இந்த கால அவகாசத்தில், குழுவின் கூட்டத்தை நடத்தியதன் மூலம், BSNL  நிர்வாகம், யாரை மகிழ்விக்க விரும்பியது ?

9.            BSNL  நிறுவனம், ஒரு தனியார் நிறுவனமல்ல.

10.          அது இந்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் என்பதை நிர்வாகத்துக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்.  எனவே, அதற்கான விதிமுறைகளும், வடிவங்களும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

11.          30.3.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கம் கலந்து கொள்ளாமல் இருந்தும், நிர்வாகம் அளிக்க முன்வந்த PLI தொகையைக் குறித்து BSNL ஊழியர் சங்கம் எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது என்று மேற்கண்ட கடிதத்தில் கேட்கப் பட்டுள்ளது.

12.          PLI – ஆக ஓர் இரண்டு இலக்க தொகையை அளிக்க விரும்புவதாக CMD BSNL அவர்கள், BSNL ஊழியர் சங்கத்திடம் பல முறை தெரிவித்துள்ளார்

13.          BSNL ஊழியர் சங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

14.          அது மட்டுமல்ல, 29.3.2016 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள், CMD BSNL – அவர்களைச் சந்தித்த போது கூட, ஒரு பவுண்டுக்கு ( இந்திய மதிப்பு : ரூபாய் 96-00 )  இணையான தொகையை PLI – ஆக அளிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

15.          BSNL ஊழியர் சங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 

16.          ஆனாலும், முதன்மை அங்கீகாரச் சங்கத்தைப் புறக்கணித்து விட்டு, NFTE சங்கம் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டதால், நிர்வாகம் அவசர அவசரமாக குழுவின் கூட்டத்தைக் கூட்டியது துரதிருஷ்டவசமானது

17.          எங்களது கடிதத்தில், CMD BSNL - அவர்களுக்கும், NFTE சங்கத்துக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

18.          எங்களது கடிதத்தில் எழுதப் பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

19.          ’ரகசிய உடன்படிக்கைஎன்ற சொற்றொடர் அவை மரபை மீறிய சொற்றொடரல்ல.

20.          BSNL ஊழியர்கள் மீது ஓர் அற்பத் தொகையை திணிப்பதற்காக ஒரு புரிதலை CMD BSNL - அவர்களும், NFTE சங்கமும் ஏற்படுத்திக் கொண்டதன் பிறகே 30.3.2016 அன்று PLI–குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதை நாங்கள் இப்போதும் உறுதிபட கூறுகிறோம்.

21.          ஊழியர்களின் முதன்மை அங்கீகாரச் சங்கம் என்ற முறையில்இதற்கு எங்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்கும்கூடவே, ஊழியர்களுக்கு நியாயமான .  PLI வழங்க வேண்டும் என கோருவதற்கும் எங்களுக்கு அனைத்து நியாயங்களும் உள்ளன. 

22.          BSNL ஊழியர் சங்கம் ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கமாகும்.


கப் சிப்………


இந்தக் கடிதத்திற்குப்பிறகு  BSNL நிர்வாகத்திடமிருந்து பதில் எதுவும் இல்லை. வாயை மூடிக் கொண்டு விட்டது. ஆனால் ஜல்ரா  NFTE சங்கம் மட்டும்  BSNL நிர்வாகத்தின் கடிததை  தூக்கி பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றது. நமது பதிலையும் வெளியிடுவார்களா அல்லது நிர்வாகத்தின் செம்பு தூக்கியாகவே இருக்கப்



No comments:

Post a Comment