Saturday, 23 November 2013

ஏஐடியுசி மூத்த தலைவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் காலமானார்



Top of Form
ஏஐடியுசி மூத்த தலைவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் காலமானார்


சென்னை, நவ. 23-
தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஏஐடியுசியின் அகில இந்திய துணைத் தலைவரும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப் பினருமான தோழர்எஸ்.எஸ்.தியாகராஜன் சனிக் கிழமை காலமானார்.
அவ ருக்கு வயது 74.சென்னையில் லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தோழர் தியாகராஜன் காலமானார். சமீப காலமாக அவர் உடல்நலம் குன்றி யிருந்தார். ஏஐடியுசியின் மாநிலபொதுச் செயலாளராக வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்த தோழர் தியாகராஜன், முதுமை காரணமாக அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட் டிருந்தார்..
இன்று இறுதி நிகழ்ச்சிதோழர் தியாகராஜன் உடல், அஞ்சலிக்காக சென்னை சிந்தாதிரிப் பேட்டை யில் உள்ள ஏஐடியுசிமாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை 4 மணியளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப் படுகிறது.
சிபிஎம் இரங்கல் : தோழர் எஸ்.எஸ். தியாகராஜன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் களில் ஒருவரும், ஏஐடியுசி யின் மூத்த தலைவருமான தோழர் எஸ்.எஸ்.தியாக ராஜன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக்கொள் கிறது. அவரது குடும்பத்தின ருக்கும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் ஏஐ டியுசி தோழர்களுக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தனது ஆறுதலைத் தெரி வித்துக்கொள்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக பல் வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய தோழர் தியாகராஜனின் மறைவு ஏஐடியுசி மற்றும் சிபிஐக்கு மட்டுமின்றி, தமிழக தொழிலாளர் வர்க் கத்திற்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் பேரிழப்பு ஆகும்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

சிஐடியு இரங்கல் : தோழர் எஸ்.எஸ்.தியாக ராஜன் மறைவுக்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தோழர் தியாகராஜன் மறைவு தமிழகத் தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பு என்று அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

No comments:

Post a Comment