Monday 11 November 2013

வங்கியில் கார்ப்பரேட் நிறுவனங்க

வங்கியில் கார்ப்பரேட் நிறுவனங்கள்
பிரபாத் பட்நாயக்
ஜனவரி 2014க்குள் புதிய வங்கிகளை தனியார் திறப்பதற்கான அனுமதிகள் அவசர அவசரமாக வழங்கப்பட உள்ளன. இவ்வாறு புதிய அனுமதிகள் வழங்குவது 1994க்கும் 2001க்கும் அடுத்தபடியாக இது மூன்றாம் முறையாகும். ஆனால் இம்முறை இதற்கு முந் தைய இரண்டு முறைகளை விட வித்தியாச மானதாகும். முன்பு ரிசர்வ் வங்கி புதிய லை லென்சுக்கு அனுமதி மறுத்தவை உண்டு. ஆனால் இந்த முறை கார்ப்பரேட் முதலாளி களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளிகளான டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் ஆகியோர் லைசென்ஸ் பெறுவதற்கான வரிசையில் நின்று கொண் டிருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை.
வங்கி தேசியமயத்துக்கு முந்தைய நிலை
புதிய அனுமதிகள் நமக்கு பயத்தை ஏற் படுத்துகின்றன. 1969ல் வங்கிகள் தேசிய மயத்துக்கு முந்தைய நாட்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும் நிறுவனங் கள் அப்போது தங்களது சொந்த வங்கிகளை வைத்திருந்தன. உண்மையில் எல்லா பெரு நிறுவனங்களும் தாங்கள் வைத்திருந்த வங்கிகள் மூலம் மக்களிடமிருந்து வைப்புத் தொகைகளைப் பெற்று தங்களுடைய நலன் களைப் பெருக்கிக் கொண்டனர். வங்கித் தொழில் என்பது தங்கள் குழுமத்தின் பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதற் காகவே நடத்தப்பட்டது. அவர்கள், எந்த தொழிலில் ஆர்வம் காட்டினார்களோ, அந்தப் பகுதிக்கு வங்கிக் கடன் திருப்பப்பட்டது. சிறு விவசாயிகள் வேளாண்மையைப் பெருக்கு வதற்கு, எந்தக் கடனும் வழங்கப்படவில்லை. வேளாண்மை என்பது வங்கிக் கடன் வரம்புக்கு வெளியில் இருந்தது.
வங்கி தேசியமயத்துக்கான காரணம்
வங்கி தேசியமயம் என்பது இவற்றை யெல்லாம் மாற்றம் என்று கருதப்பட்டது. மற்ற எல்லாவற்றிலிருந்தும் வங்கித்தொழில் வேறுபட்டது. மற்ற சந்தைகளைவிட கடன் சந்தை வித்தியாசமானது. மற்ற சந்தையில் உதாரணமாக மரசாமான்கள் சந்தையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. வாங்குபவர் கள் பையில் உள்ள பணத்தின் அடிப் படையில், அதாவது முன்கூட்டியே உள்ள நிதி ஆதாரத்தின் அடிப்படையில் விற்கப்படு கிறது. வாங்குபவர்கள் பணத்தைப் பொரு ளுக்கு பதில் கொடுக்கின்றனர். விற்பவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொருளைக் கொடுக்கின்றனர். ஆனால் கடன் சந்தை என்பது வேறு. வாடிக்கையாளர்கள் பணத் தைப் பெற்றுக் கொள்கின்றனர். வங்கிகள் ஒப் பந்த அடிப்படையில் புதிய பணத்தை உரு வாக்குகின்றன. வங்கிகள், மூலதனத்தின் மீது கட்டளை பிறப்பிக்கின்றன. வங்கிகள் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்து கின்றன. எந்த பகுதி, எந்தக்குழு, எந்தத் துறை வளர வேண்டும் என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன. எனவே சமூகத்துக்கு வங்கியின் மீது முழுமையான கட்டுப்பாடு அவசியம். இதுதான் வங்கி தேசியமயத்துக் கான தத்துவம். எப்போதும் போல இந்த தத்து வம் இன்றும் பொருந்தக்கூடியது. எந்தப் பகுதியில் வங்கிகள் கடன் கொடுக்க வேண் டும் என்பதை தேசியமயம் முடிவு செய்தது. ஆனால், வங்கிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கடன் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுதந்திர சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய வங்கிகளை தனியார்மயமாக்கக் கோருதல்
பன்னாட்டு நிதி மூலதனங்கள், இந்தியா வில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி களை தனியார்மயமாக்கக் கோருகின்றன. கடும் எதிர்ப்பு வரும் என்பதால் இந்திய அரசு இதனைச் செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்த உண்மையை புரிந்து கொண்ட காரணத் தால், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் கோரிக் கையைக் குறைத்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவை தொடர்ச்சியாக ஆண்டு வந்த அரசுகள் இந்தியாவின் அரசு வங்கியா கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை தனி யார்மயமாக்கினால் போதும்; தங்கள் நோக்கம் நிறைவேறிவிடும் என்று கோரியுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் பெரிய வங்கி என்பதாலும், உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக உள்ளதாலும், பாரத ஸ்டேட் வங்கியை அமெரிக்க அரசு குறி வைத் துக் கோருகிறது. அதை தனியார்மயமாக் கினால் கடும் எதிர்ப்பு கிளம்பும். அதை சந் திக்க முடியாது என்பது மத்திய அரசுக்கும் தெரியும். நாட்டிலுள்ள வங்கித் தொழிலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை, வங்கி துவக்க அனுமதிப்பது என்றும் அதன் மூலம் கொல்லைப்புற வழியாக தனியார் மயத்தை திணிக்க முடியும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
வங்கிகளை இணைத்தல்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவில் வந்து தொழில் துவங்குமாறு, வெளிநாட்டு வங்கிகளுக்கு அழைப்பு விடுத் துள்ளார். மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தனியார் வங்கிகள் செயல்படத் தொடங்கினால், பின்னர், பொதுத்துறை வங்கி களை இணைப்பு என்ற பெயரில் ‘ஒன்றி ணைப்பது’, பல தனியார் வங்கிகளை ‘மேற் கொள்வது’ என்று இரண்டு வடிவங்களிலும் தனியார்மயத்தை அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. சுற்றி வளைத்து தனியார்மயத்தை அமல்படுத்து வது என்று மத்திய அரசு நினைக்கிறது. சுதந் திரத்துக்குப் பிந்தைய காலத்தில் நிகழ்ந்த, வங்கி தேசியமயத்தை நிராகரிக்கும் பணி யாக இது முடியப்போகிறது.
வங்கி தேசிய மயத்தால் வந்த பசுமைப் புரட்சி
வங்கிதேசியமயத்திற்கு முன்னர் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகளும், சிறு தொழில் உற்பத்தியாளர்களும் வங்கிதேசிய மயத்திற்குப் பின்னர், நிறுவனக்கடன் பெற்ற னர். விவசாயிகள் மத்தியில் கடன் வழங் கியது சமனற்ற நிலையில்தான் இருந்தது. பெரிய நிலப்பிரபுக்களும், பணக்கார விவசாயி களும் பெரிய பயன் அடைந்தார்கள். அதே சமயம் பசுமைப்புரட்சி என்பது, வங்கிக் கடன் வழங்காமல் சாத்தியமாக்கப்படவில்லை. வங்கி தேசியமயம் உறுதிப்படுத்திய வகை யில் கடன் வழங்கப்பட்டதால், இது சாத்திய மாயிற்று. 1960களில் ஏற்பட்ட பீகார் பஞ்ச மும், உணவுப் பிரச்சனைகளும், உணவுக் காக, ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்க வைத் தது. ஆனால், வங்கி தேசியமயம், உணவுப் பஞ்சத்தைப் போக்குவதில் இருந்த தேக்க நிலையை உடைத்தது. சுற்றுப்புற சூழல்வாதி கள் பசுமைப்புரட்சியை விமர்சனம் செய்த னர். அந்த விமர்சனம் சரியாகக்கூட இருக்க லாம். ஆனால் பசுமைப்புரட்சி என்பது ஏகாதி பத்தியத்தை சார்ந்து இருந்த போக்கை மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மைக் கடன்
பொருளாதார சுதந்திரம் என்று சொல்லத் துவங்கியதற்குப் பின்னால் வேளாண் மைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. முதன்மைப் பகுதி என்ற விளக்கத்தில் வேளாண்மை இருந் தது. ஆனால் முதன்மைப் பகுதி என்பதற் கான விளக்கம் விரிவுபடுத்தப்பட்டு, வேளாண்மைக்கான நியாயமான கடன் என்பது அதில் ஒரு சிறு பகுதியாக மாறியது. வெளிநாட்டு வங்கிகள் இந்த அளவுகோலை இன்னும் நீர்த்துப் போகச் செய்தன. தனியார் வங்கிகளும் இதனைப் பின்பற்றத் தொடங் கின. இத்தனைக்குப் பிறகும் முதன்மைப் பகு திக்கு அதிக அளவில் கடன் கொடுப்பவை யாக பொதுத்துறை வங்கிகள் விளங்குகின்றன.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு சவால்
இந்த நிலையில் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் இருப் பை அதிகப்படுத்திடுவது என்பது மோசமானது. மேலும் மத்தியஅரசு சமீபத்தில்தான் உண வுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, அதாவது மக்கள்தொகையில் பெரும்பங்கின ருக்கு உணவின் தேவையை அதிகரிக்கும் போது, நாட்டில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் மைக் கடனை அதிகப்படுத்தினால் மட் டுமே இது சாத்தியமாகும். முதன்மைப் பகுதி யாகிய வேளாண்மைப் பகுதிக்கு கடன் வழங்குதல் என்ற விளக்கத்தை கட்டாயமாக அமல்படுத்தினால் மட்டுமே இது முடியும். பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த ஆணை யை வழங்கினால் மட்டுமே இயலும். அதேசமயம் வெளிநாட்டு வங்கிகளை யும், தனியார் வங்கிகளையும் அனுமதிப்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு தண்ட னை வழங்கப்படுகிறது. வெளிநாட்டு வங்கி களும் கார்ப்பரேட் வங்கிகளும் முதன்மைப் பகுதிக்கு கடன் வழங்காத நிலை உள்ளது. இத்தகைய வங்கிகளை அனுமதிப்பதன் மூலம், மத்திய அரசுதான் உருவாக்கிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, தானே அமல்படுத் தாத நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. நிச்சயமாக வெளிநாட்டு வங்கிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வர வேற்பது என்பது வேளாண்மைக் கடனுக் கான கதவுகளை அடைப்பது என்பதாகத் தான் முடியும்.
தேர்தலுக்குப் பின் என்ன நிலை?
வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் செய் வது என்பதை வேறு வார்த்தைகளில் சொல் லப்போனால், தேர்தல் முடிந்த பின்னர் உணவுப் பாதுகாப்புச் சட்டம் புதைக்கப்படும். உணவுக்குப் பதில் பணம் என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர், மத்திய அரசு, உணவுக்குப் பணம் என்னும் நிலைக்கு மாறி விடும். தற்போது விலைவாசி ஏறிக்கொண்டே போவதால், உணவுக்குக் கொடுக்கப்படும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கும். அரசுக் குள் இருக்கும் புதிய சுதந்திர சிந்தனையாளர் கள், அரசாங்கத்தின் இந்தத் தன்மையை முற்றிலும் ஏற்றுக் கொள்பவர்களாக அப் போது மாறியிருப்பார்கள்.
வாகனக் கடன்களுக்கு பணம்
இதே திசையில் வளர்ச்சியும் ஏற்படும். வாகனக் கடன்களுக்கு மத்திய அரசு தனது நிதியிலிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும். இதன் மூலம் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளின் கோரிக்கை நிறைவேறும். ஆனால் வேளாண்மையின் வளர்ச்சி, பின்னுக்கு தள்ளப்படும்.
வீரத்தோடு போராடுவோம்
வங்கிக் கொள்கையில் அரசு ஏற்படுத்தும் மாற்றங்கள் மோசமானவை. விவசாயிகளுக் கும் சிறு உற்பத்தியாளர்களுக்கும் கடன் வழங்குவதை விட, நுகர்வோர் கடனை அதி கப்படுத்துவதில்தான் மாற்றங்கள் உள்ளன. கார்ப்பரேட் கம்பெனிகளின் குழுமத்தின் வலிமை, சிறு விவசாயிகளின் குழுமத்தை விட வலிமை வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வங்கி தேசியமயத்தைப் பின்நோக்கி இழுத்துச செல்வதற்கே உதவும்.

No comments:

Post a Comment