Friday 13 September 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே



நெஞ்சு பொறுக்குதில்லையே 

கிருஷ்ணா - கோதாவரி படுகையிலிருந்து இயற்கை எரிவாயு எடுப்பதில் மத்திய அரசிடம் ரிலையன்ஸ் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந் தத்தின் படி இதுவரை நடந்து கொள்ளவில்லை. மாறாக தானடித்த மூப்பாக கேள்விகேட்பாரற்று இந்தியாவின் இயற்கை வளத்தைக் கொள்ளை யடித்து கொழுத்து வருகிறது. எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன்கள் தலை மை இயக்குநரகம் மீண்டும் ரிலையன்ஸ் நிறு வனத்தின் மோசடித்தனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந் தத்தின்படி கிருஷ்ணா-கோதாவரி படுகையின் டி - 6 தொகுப்பில், 2012 -13ம் ஆண்டில் எட்டபட வேண்டிய இயற்கை எரிவாயு உற்பத்தி இலக்கை எட்ட வில்லை. ஒரு நாளைக்கு 86.73 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கன மீட்டர் அளவில் உற்பத்தி இருக்க வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் சராசரியாக 26.07 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கன மீட்டர் அளவே உற்பத்தி செய்திருக்கிறது.
ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட அளவு முதலீடு செய்யப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும். அதற் காகத்தான் ஒப்பந்தத் தொகை. உற்பத்தியின் அளவில் மாறுபாடு இருக்கும் போது ஒப்பந்த மும் விதிகளும் மாறுபடும். அதன்படி குறிப் பிட்ட முதலீடு செய்யப்பட்டு அதற்கேற்ற நிர் ணய அளவு உற்பத்தி நடக்கவில்லை என்றால் செலவை திரும்ப பெறுவதும் விகிதாச்சாரப்படி குறைக்கப்பட வேண்டும்.
இந்த விதிகளின்படி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ 4 ஆயிரத்து 998 கோடியே 40லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என ஹைட்ரோ கார்பன்கள் தலைமை இயக்குநரகம் கடந்த ஜூலை மாதம் பெட்ரோலியத்துறை அமைச்சகதிற்கு பரிந் துரை செய்துள்ளதுஆனால் அதனை தற்போதைய பெட்ரோலி யத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி வசூலிப்ப தற்குப் பதிலாக, ரிலையன்ஸ பாதுகாக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
ஏற்கனவே 2011 - 2012ம் ஆண்டில் இதே மோசடியில் ரிலையன்ஸ் ஈடுபட்ட போது அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி அந்நிறுவனத்திற்கு ரூ 6400 கோடி (100 கோடி டாலர் ) அபராதம் விதித்து உத்தரவிட்டார். அத னை ரிலையன்ஸ் தூக்கி தூரப்போட்டுவிட்டது. அத்தொகையை இன்று வரை கட்டவில்லை.ரிலையன்ஸின் திட்டமிட்ட மோசடி வேலை களை மத்திய பொதுக்கணக்கு தணிக்கைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது.
அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உற்பத்திக் கான உள்கட்டமைப்பு இருந்தும் ரிலையன்ஸ் உற்பத்தி செய்ய மறுக்கிறது. இதன்மூலம் அரசிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது என கூறியிருக்கிறது. ஆனால் மனச் சாட்சியே இல்லாமல் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் ரிலையன்ஸ்க்கு பல்லக்குத் தூக்கு கின்றன.இதுமட்டுமல்ல ரிலையன்ஸ் உற்பத்தி செய் யும் ஒரு யூனிட் எரிவாயுவின் விலையை 268.8 ரூபாயிலிருந்து 537.6 ரூபாயாக உயர்த்தி மத்திய அமைச்சரவை விலை நிர்ணயம் செய்து கொடுத்தது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்த, தண்டிக்க வேண்டிய மத்திய அரசு ஐம்புலன் களையும் அடக்கிக் கொண்டு சும்மாயிருக்கிறது. தொடர்புடைய துறை அமைச்சர்கள் ரிலையன் சின் அதிகாரப்பூர்வ வக்கீல்கள்களாக மாறி துதி பாடி வருகின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட் டால் என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகத் திற்கு வருகின்றன.
theekkathir

No comments:

Post a Comment