BSNLEU AIBDPA TN BSNLEU TCWU ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக
ஏப்ரல் 5 டெல்லியில் நடைபெறும் விவசாய தொழிலாளி பேரணி பற்றிய கருத்தரங்கம் நெல்லையில் G.M. அலுவலக மாநாட்டு அரங்கில் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும்
AIBDPA மாவட்ட செயலர் தோழர் S.முத்துசாமி அவர்கள் தலைமையில் தொடங்கியது.
கலந்து கொண்ட தோழர்கள் அனைவரையும் BSNLEU நெல்லை மாவட்ட செயலர் தோழர்
N. சூசை மரிய அந்தோணி அவர்கள் உற்சாகமாக வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
தொடக்க உரையை BSNLEU மாநில உதவி செயலர் தோழியர் S.அழகுநாச்சியார் அவர்களும், விளக்க உரையை AIBDPA அகில இந்திய உதவிப் பொருளாளர் தோழியர் V. சீதாலட்சுமி அவர்களும் பேரணியின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் P.ராஜகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கருத்தரங்கிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் கலந்து கொண்டு நெல்லை மாவட்டம் சங்கம் மற்றும் மாவட்ட செயலரின் செயல்பாடுகள் குறித்தும் பேரணியின் அவசியம் குறித்தும் எழுச்சியுரை ஆற்றினார்கள்.
சிறப்புரையாக AGS BSNL CCWF, TNTCWU மாநில தலைவர் தோழர்
C.பழனிச்சாமி அவர்கள் பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள் அதிக எண்ணிக்கையில் தோழர்களை திரட்டிய ஒருங்கிணைப்பு குழுவிற்கும், சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய நெல்லை மாவட்ட செயலருக்கும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெண் தோழியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
தோழர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
கலந்து கொண்ட பெண் தோழியர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் S.முருகன் அவர்கள் நன்றி உரையுடன் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு சர்க்கரை பொங்கலுடன் வழங்கப்பட்டு கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது.
அதன் பின் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, WWCC மாவட்ட கன்வீனர் தோழியர் S.சுகந்தி பானு அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்.
BSNLEU - 49
AIBDPA - 34
TNTCWU -15.
மொத்தம் 98 தோழர்கள்.
கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.🙏
நி.சூசை மரிய அந்தோணி,
மாவட்ட செயலர்,
BSNLEU, நெல்லை.
No comments:
Post a Comment