சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை ?
18.12.2022 அன்று நடைபெற்ற சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, நீதிமன்றம் ஏற்கனவே விலக்கிக் கொண்டுள்ளது. ஆனாலும், நிர்வாகம் இன்னமும் முடிவுகளை வெளியிடவில்லை. முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததால், தேர்வு எழுதியவர்கள், கோபத்தில் உள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட வைப்பதற்கு, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, 14.03.2023 அன்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, திருமிகு சமிதா லுத்ரா GM (Rectt. & Trng.) அவர்களை சந்தித்து விவாதித்தார்.
நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்கு, பல தொகுக்கும் பணிகள் உள்ளதாக, GM (Rectt. & Trng.) பதிலளித்தார். மாற்று திறனாளிகளுக்கு, மொத்தமுள்ள 445 பதவிகளில், 4 சதவிகிதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 4 சதவிகிதம் கணக்கிட்டால், அது 18 பதவிகள் என வருகிறது. இந்த 18 பதவிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பிரிப்பது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி?
உதாரணமாக, 4 ச்தவிகித பதவிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கினால், அங்கு OC பிரிவில் உள்ளவர் வெளியேற்றப்படுவார். அவர், இரண்டாவது விருப்பமாக தமிழ்நாட்டினை தெரிவித்திருந்து, அவருக்கு தமிழ்நாடு மாநிலம் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும்.
மாற்று திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்வதில், புதிய சட்ட பிரச்சனைகள் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள RECRUITMENT மற்றும் ESTABLISHMENT பிரிவுகள், பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, GM (Rectt. & Trng.) தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, விரைவில் தீர்வு காண்பதற்கு கார்ப்பரேட் அலுவலகம் பணியாற்றி வருவதாகவும், GM (Rectt. & Trng.) கூறினார்.
சிறப்பு JTO தேர்வு எழுதியுள்ள தோழர்கள், அமைதி காக்கவும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண BSNL ஊழியர் சங்கம் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
தோழர் P. அபிமன்யு
பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment