இரங்கல் கூட்டம்.
----------------------------
நெல்லை மாவட்டம்
--------------------------------
19.10.2020 திங்கள்கிழமை, GM அலுவலகத்தில் வைத்து மதியம் 01.00 மணியளவில்,AIBDPA மாவட்ட செயலர் தோழர் D. கோபாலன் அவர்களுக்கு BSNLEU சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் N. சூசை மரியஅந்தோணி தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்ட TDM கலந்து கொண்டு தோழர் D.கோபாலன் அவர்கள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து அனைத்து தோழர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நமது AIBDPA மாநில உதவி தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி, TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P. ராஜகோபால், அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்,SNEA மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், NFTE BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சாலன், TEPU மாவட்ட செயலாளர் தோழர் சுகுமார் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் அஞ்சலி உரையாற்றினர்.
நமது AIBDPA தோழர்கள் உட்பட பல அதிகாரிகள் ,ஊழியர்கள்,தோழமை சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிறைவாக AIBDPA மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி அஞ்சலி நிறைவுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.