3 வது நாள் தர்ணாபோராட்டம்
தமிழகம் முழுவதும் பரவலாக பல
மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை.
ஒப்பந்ததாரர்கள் BSNL நிர்வாகம் தங்களுக்கு பணம்
வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தில்
இதற்கான நிதி ஒதுக்கித் தர வற்புறுத்தியுள்ளது. விரைவில் நிதி வழங்கப்படும் என
கார்ப்பரேட் அலுவலகம் உறுதியளித்துள்ளது. ஆனாலும் கடுமையான காலதாமதம் ஆவதால்
உடனடியாக ஒப்பந்த ஊழியருக்கு ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு
தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் 22.12.2017 அன்று மாவட்ட தலைநகர்களில் மாலை நேர தர்ணா நடத்திட அறைகூவல் விட்டுள்ளன. அதப் அடிப்படையில்
திருநெல்வேலியில் இருமாவட்ட
சங்கங்கள் இணைந்து
22-12-2017 அன்று GMஅலுவலகத்தில்
மதியம் 2.00 மணிக்கு மாலை நேர தர்ணாபோராட்டம் நடைபெறது
No comments:
Post a Comment