Monday 5 December 2016

ஆளுமைக்கு... அஞ்சலி


                           ஆளுமைக்கு... அஞ்சலி







முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள்  அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரது ஆளுகை என்பது மற்ற எல்லா ஆளுகையையும் போல இன்னொரு ஆளுகை. ஒரு populist அரசாக அது இருந்தது. எல்லா மனிதர்களையும் போல அவரும் மாறிக் கொண்டிருந்தார். காலம் அவரிடமும் மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மதமாற்றத் தடைச் சட்டம், பா.ஜ.க ஆதரவு, ஈழப் போராட்ட எதிர்ப்பு முதலான அவரது முதற் கட்ட  மோசமான நடவடிக்கைகளை அவரது பிந்தைய ஆட்சிகளில் அவர் தொடரவில்லை. சங்கராசாரி, சுப்பிரமணிய சாமி முதலான நபர்களுக்கும் அவர் எதிராக இருந்தார்.  மக்கள் அவர் மீதுகொண்டிருந்த நேசம்  கவனமான ஆய்வுக்குரிய ஒன்று. யாருடைய மரணத்திற்கும் அஞ்சலி செலுத்தச் செல்லும்போது அவரது ரத்த பந்தங்களின் கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்லி அகல்வோம். இங்கு யாருடைய கரங்களைப் பற்றி நாம் ஆறுதல் சொல்வது. நேற்று முழுவதும் எங்கெங்கிருந்தோ ஓடி வந்து 'அம்மா.. அம்மா..' என அலறி நின்ற அந்த அடித்தள மக்களிடம்தான் நாம் நம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அஞ்சலிகள்..⁠⁠⁠⁠




No comments:

Post a Comment