தமிழகத்தில் BSNL-SSAகள் வணிகப்பகுதிகளாகப் பிரிப்பு . . .
தமிழகத்தில் BSNL-SSAகள் வணிகப்பகுதிகளாகப் பிரிப்பு
SSAs into BUSINESS AREAS in TAMILNADU
தமிழகத்தில் ERP முழுமையாக அமுலானதைத் தொடர்ந்து தற்போதைய SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் BUSINESS AREA எனப்படும்வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுடெல்லி தலைமையாகத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் கீழ்க்கண்டவாறு 10 வணிகப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------
வணிகப்பகுதி இணைக்கப்படும் மாவட்டம்
----------------------------------------------------------------------------------------------
கோவை - நீலகிரி
மதுரை - காரைக்குடி
நாகர்கோவில் - திருநெல்வேலி
பாண்டிச்சேரி - கடலூர்
சேலம் - தர்மபுரி
தஞ்சாவூர் - கும்பகோணம்
தூத்துக்குடி - விருதுநகர்
வேலூர்
ஈரோடு
திருச்சி
----------------------------------------------------------------------------------------------
* வேலூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழக்கம் போல் தனித்துசெயல்படும். சிறிய 7 மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
* வணிகப்பகுதிகள் மனிதவளம்,நிதி,திட்டம் மற்றும் பொருள் கொள்முதல் ஆகியபணிகளை மேற்கொள்ளும்.
* இணைக்கப்பட்ட சிறிய மாவட்டங்கள் வலைப்பின்னல் பராமரிப்பு மற்றும்வாடிக்கையாளர் சேவை ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
* வணிகப்பகுதிகள் உருவாக்கத்தால் ஊழியர் மாற்றல் இருக்காது.ஊழியர்களுக்கான மாற்றல் எல்லை பழைய SSA என்ற அளவிலேயே இருக்கும்.
20/08/2016க்குள் மேற்கண்ட வணிகப்பகுதி உருவாக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment