Monday, 26 December 2016

CHQ NEWS

                                                                CHQ NEWS


[26.12.2016]Management forms a truncated Wage Revision Committee.
BSNLEU is insisting upon the Management to start the Wage negotiations, since government has already constituted the 3rd PRC for the Executives. But, the Management has been avoiding it, on the plea that they have not received clearance from the DPE, for doing so. In this situation, BSNLEU demanded to at least constitute the Wage Negotiations Committee, so that wage negotiation can be started immediately after clearance is received from the government. But, this demand was also not considered, despite so many letters are written. Finally com.P.Abhimanyu,GS, met the CMD BSNL last Friday, and insisted the demand. After discussion, the CMD BSNL gave a positive assurance. However, the Corporate Office has issued letter today, for the formation of a Wage Revision Committee, without representation from the Recognised Unions. This is not acceptable to us. BSNLEU will soon formation of a Wage Negotiation Committee, which will be consisting of both Management and Union sides.<<<view Corporate Office Letter>>>

Saturday, 17 December 2016

Fund allotment for GPF payment may not be possible this month




Fund allotment for GPF payment may not be possible this month – says GM (T&BFCI).
CHQ is getting enquires from various circles, with regards to the allotment of GPF fund by the Corporate Office. Com. P. Abhimanyu, GS, discussed this issue with shri Y.N. Singh, GM (T&BFCI). The GM told that BSNL is facing acute shortage of cash due to demonetisation. He further told that the revenue collection of BSNL has been greatly affected and Corporate Office is not in a position to allot funds this month for payment of GPF advance. CHQ will further take up this issue.

K.G.போஸ் தினமும்,BSNLEU-8வது அகில இந்திய மாநாடும்...





அருமைத் தோழர்களே ! நமது BSNLEU தமிழ் மாநில சங்க முடிவின் அடிப்படையில் 17-12-16 அன்று  
திருநெல்வேலி&தூத்துக்குடி மாவட்டசங்கங்கள் இனைந்து,

திருநெல்வேலியில் சிறப்பு கருத்தரங்கம் GMஅலுவலகத்தில் மிகவும்  சிறப்பாக நடைபெற்றது....சிறப்புரை தோழர்கள் S, சுப்பிரமணியன் BSNLEU மாநில உதவி செயலர் திருப்பூர் மற்றும் LIC கோட்டச் செயலர் MKS நெல்லை, மற்றும் திருநெல்வேலி   தூத்துக்குடி மாவட்டச் சங்க

 தலைவர்கள் ,செயலர்கள் மாநில பொறுப்பாளர்கள் தோழர்கள் RM கிறிஸ்டோபர் &சுவாமி குருநாதன் ஆகியோர் கலந்து கோன்டனர்
இரு மாவட்சங்க தோழர்கள் பெறுவாறியாக கலந்து கோன்டனர்












































அஞ்சலி



அஞ்சலி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல்  கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU  திருநெல்வேலிமாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .


Image may contain: 2 people



அஞ்சலி

Wednesday, 14 December 2016

வெற்றிகரமாக்குவோம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை



வெற்றிகரமாக்குவோம் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை

இன்று மாலை பாளையம்கோட்டை தொலைபேசிநிலையத்தில் வேலை நிறுத்த தயாரிப்புக் கூட்டம் நடந்தது












Sunday, 11 December 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்


டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம்

BSNLஐ காக்கும் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!

15/12/2016 வேலை நிறுத்தம்


 15/12/2016 வேலை நிறுத்தம் 




மகாகவி பாரதியார் பிறந்த தினம்

Tuesday, 6 December 2016

டாக்டர் அம்பேத்கர்




அஞ்சுவது யாதோன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை----


 இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதாஅறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.





Monday, 5 December 2016

ஆளுமைக்கு... அஞ்சலி


                           ஆளுமைக்கு... அஞ்சலி







முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள்  அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரது ஆளுகை என்பது மற்ற எல்லா ஆளுகையையும் போல இன்னொரு ஆளுகை. ஒரு populist அரசாக அது இருந்தது. எல்லா மனிதர்களையும் போல அவரும் மாறிக் கொண்டிருந்தார். காலம் அவரிடமும் மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மதமாற்றத் தடைச் சட்டம், பா.ஜ.க ஆதரவு, ஈழப் போராட்ட எதிர்ப்பு முதலான அவரது முதற் கட்ட  மோசமான நடவடிக்கைகளை அவரது பிந்தைய ஆட்சிகளில் அவர் தொடரவில்லை. சங்கராசாரி, சுப்பிரமணிய சாமி முதலான நபர்களுக்கும் அவர் எதிராக இருந்தார்.  மக்கள் அவர் மீதுகொண்டிருந்த நேசம்  கவனமான ஆய்வுக்குரிய ஒன்று. யாருடைய மரணத்திற்கும் அஞ்சலி செலுத்தச் செல்லும்போது அவரது ரத்த பந்தங்களின் கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்லி அகல்வோம். இங்கு யாருடைய கரங்களைப் பற்றி நாம் ஆறுதல் சொல்வது. நேற்று முழுவதும் எங்கெங்கிருந்தோ ஓடி வந்து 'அம்மா.. அம்மா..' என அலறி நின்ற அந்த அடித்தள மக்களிடம்தான் நாம் நம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அஞ்சலிகள்..⁠⁠⁠⁠




வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...


வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...



BSNL  நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும் 
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து 

செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல விடமாட்டோம் 
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு கொள்ளும் 
டிசம்பர் 15 ஒரு நாள்  அகில இந்திய 
வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்குவோம்...

ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்... 
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்...


Sunday, 4 December 2016

மாநில சங்க சுற்றறிக்கை



 மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

சுற்றறிக்கை எண்:143
நிர்வாகத்துடன் மத்திய சங்கம் சந்திப்பு மற்றும் ஜியோவின் சலுகை நீட்டிப்பும்

Thursday, 1 December 2016

மாநில சங்க சுற்றறிக்கைஎண்:142


மாநில சங்க சுற்றறிக்கைஎண்:142


Read | Download

எண்:142
8வது அனைத்திந்திய மாநாட்டு கொடியேற்றமும் கருத்தரங்கங்களும்

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை


Read | Download

BSNLஐ காக்கும் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!
துணை டவர் நிறுவனம் தொடர்பாக குழப்பமூட்டும் செய்திகளை அரசும் நிர்வாகமும் பரப்பி வருகிறது. அதனை விளக்கியும் வேலை நிறுத்தத்தின் முக்கியம் தொடர்பாகவும் மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கம்.

Tuesday, 29 November 2016

சிறப்பு கருத்தரங்கம்





அண்ணாச்சியும், அம்பானியும்




அண்ணாச்சியும்,  அம்பானியும்
~~~~~~~~~
வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

 வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
 இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

" ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.04 in CHENNAI at Reliance Fresh .......

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே! !

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி  எங்கே! !..

அனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு
(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து, அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிக்கும் அம்பானியின் அல்லக்கை மோடிக்குத் தெரியுமா??

அம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.

ஆனால்  அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி,  வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு  இருக்கும் என்பது.

26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...

26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...



ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குதலைமை தாங்கி நடத்தியும்விடுதலைப் பெற்றநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்புவேலைகளிலிருந்து காத்தும் 33 ஆண்டு காலமாகஈடுஇணையில்லாத தொண்டாற்றியபெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ.சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகாரஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல்காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன்சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமானஇடத்தை பெற்றுள்ளனர்காஸ்ட்ரோவின்ஆட்சியை கவிழ்க்கவும்அவரைப் படுகொலைசெய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாதுமுயற்சி செய்ததுஉலக வல்லரசானஅமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல்காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்இதன்விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப்போற்றப்பட்டார்கியூபாவின் அதிபராகஆனபின்னும் எளிமையான மக்கள்தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார்இவருடையவழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள்விழிப்புணர்வைப் பெற்றனர்அதன் விளைவாகஇந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்குஎதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர்.கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத்துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளதுதென்ஆப்பிரிக்க நாட்டின்விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் முதல்குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்ஆனாலும் மறுமுறை அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை.தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்த அவரை இன்னமும் தென்னாப்பிரிக்க மக்கள் தங்களின்பாசத்திற்குரிய தேசத் தந்தையாகப் போற்றுகிறார்கள்பிடல் காஸ்ட்ரோவின் இந்தப் பதவி துறப்பு உலகநாடுகளில் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என நம்புகிறோம்.எத்தனை வயதானாலும் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள்பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார். அன்புத் தலைவனுக்கு செவ்வணக்கம்