அன்பிற்கின்யவர்களே ! தொழிலாளர் தினமான "மே" 1-ந் தேதி முதல் BSNL"லேன்ட் லைன்"இரவு 9 மணி முதல் காலை 7 மணி இலவசம்....
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நிறுவன தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கு , இரவு நேரத்தில்தங்களது நிறுவனத் தரை வழித் தொலைபேசி மூலம் அழைக்கும் சேவையை மே 1ஆம் தேதியிலிருந்துBSNL. நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.இதுகுறித்து BSNL. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:எங்களது தரைவழித் தொலைபேசி மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்துசெல்லிடப்பேசி, தொலைபேசி நிறுவனத்திற்கும் மேற்கொள்ளும் இரவு நேர அழைப்புகளை,மே 1ஆம்தேதியிலிருந்து இலவச அழைப்பு சேவையாக BSNL வழங்க உள்ளது.இந்தத் திட்டத்தின்படி BSNL. நிறுவனதொலைபேசியிலிருந்து இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணிவரை மேற்கொள்ளும் அழைப்புகள் இலவச அழைப்பாகவழங்கப்படும்.கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், தரைவழித் தொடர்பு சேவையில் இணைப்பு பெறப்பட்ட குறிப்பிட்டதிட்டங்களில், தரைவழித் தொடர்பு சிறப்புத் திட்டங்கள், அகல அலைவரிசை இணையத்துடன் கூடிய தரைவழித் தொடர்புதிட்டங்கள் என அனைத்து வகையான திட்டங்களும் இரவு நேர இலவச அழைப்பு சேவைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது என்று BSNL. அதிகாரி தெரிவித்தார்..