Saturday, 29 November 2014

நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...






அருமைத் தோழர்களே ! Forum சார்பாக  03-02-2015  முதல்
 நாம் நடத்த   உள்ள காலவரையற்ற வேலை
நிறுத்தத்தை விளக்கி நமது   ஊழியர்கள் மற்றும்
  பொது   மக்களிடம்  ஒரு மாபெரும்   பிரசார
  இயக்கம்   நடத்துவது  என டெல்லியில்
 13-11-14அன்று நடைபெற்ற ALL INDIA Forum
 (அதிகாரிகள்&ஊழியர் சங்கங்களின்கூட்டமைப்பு)   
  கூட்டத்தில் சரியான   முடிவுகள்   
  எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம்  கீழ்க்கண்ட
 இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே
 நமது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
  அனைவரையும்    தயார் படுத்துவோம்.
05-12-2014 அன்று மத்திய சங்கங்களுடன்
 இணைந்து இயக்கம்.

Ø  11-12-2014 அன்று கோரிக்கை 
தினமாக கடைப்பிடிக்கப்படும்.

Ø11-12-2014 முதல் 20-12-2014
  வரை பொதுமக்களிடம்
 பிரசார  இயக்கமும்,கையெழுத்து 
 இயக்கமும் நடைபெறும் .

Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .

Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 

Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்
              என்றும் தோழமையுடன்,

       Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU

                                        திருநெல்வேலி மாவட்டம்


Thursday, 27 November 2014

வேலை நிறுத்தம்...





          2014 நவம்பர் 27 வேலை நிறுத்தம்...
 தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை
 நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை
நிறுத்தத்தில் பங்கேற்று
வெற்றிகரமாக்கிய அனைத்து
 தோழர்களுக்கும்

 திருநெல்வேலி மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

Tuesday, 25 November 2014

CHQ NEWS





25.11.2014]Talks to be held between the JAC and the Management today.

Talks are being held between the JAC and

 the Management at 1700 hrs. today

 the 25.11.2014, on the 30 point charter of demands

. CHQ wishes to inform that the strike will

 definitely take place, if Management

 does not come up with a settlement

 for the demands. Preparations for the 

strike should continue to go on with full tempo. 

Monday, 24 November 2014

இரங்கல் செய்தி



இரங்கல் செய்தி

நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன்

 அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன்

 அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார்.

 அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர்

 தோழர் பாபுவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் 

ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். -


திருநெல்வேலி மாவட்ட சங்கம்

Saturday, 22 November 2014

G.M (O)-ல் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்...



 G.M  (O)-ல் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்...












வேலைநிறுத்த நோட்டிஸ்...

21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்வாகம்.



21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்வாகம்.

அன்பிற்கினியவர்களே,
நமது BSNL நிர்வாகத்திடம் , ஊழியர்சங்கங்களின் (JAC) சார்பாகஎதிர்வரும் 27.11.14அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கானநோட்டீஸ், கடந்த 8.10.201 அன்றே கொடுக்கப் பட்டாகிவிட்டது. ஆனால்கிட்டத்தட்ட ஒன்னரை மாத கால தாமதத்திற்குப்பின்19.11.14அன்றுதான்21.11.14அன்றைக்கு பேச்சு வார்த்தைக்குவரவேண்டுமாய்  நிர்வாகத்தால் கடிதம் கொடுத் துள்ளது. அதுவும் அங்கரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டும் தான் போசுவர்த்தைக்கு வர வேண்டும்என்று சொன்னது என்பது நமது தொழிற்சங்கங்களுடன் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையைBSNLநிர்வாகம் கொச்சைப் படுத்தவது ஆகும். இது நிர்வாகம் நமது ஒற்றுமையை குலைக்கும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.   எனவே, நமது மத்தியசங்கங்கள் எல்லாம் 21.11.14 அன்று கூடி, நமது போராட்ட களத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும்ஒன்றிணைத்து JAC யுடன் போச்சுவார்த்தையை நடத்தினால் ஒழிய,BSNLநிர்வாகத்துடன்நமதுBSNLEU+NFTEசங்கங்கள்மட்டும்பேச்சுவாரத்தைக்கு  தயாரில்லை என BSNL நிர்வாகத்திற்கு நமது JAC கடிதம்  கொடுத்துள்ளது.
ஆகவே, தோழர்களே ! போராட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

Thursday, 20 November 2014

27.11.2014 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்





Read | Download

ஒரு நாள் வேலை நிறுத்தம்
27.11.2014 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்

சோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-








அருமைத்தோழர்களே!தமிழகத்தில் எதிர்
வரும் டிசம்பர்-2014 முதல் ERP முறை
 அமலக்க இருப்பதால்
 ( For ERP Test ~ Rs.10/- has been credited into
 Employee 's Bank Account throu' NEFT
 on 19.11.14) சோதனை ஓட்டமாக  ஊழியர்கள்
அனைவரின் வங்கி கணக்கிலும்
 ரூ.10 /-நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அனைவருக்கும்
,ஒவ்வொருவரின் மொபைலிலும்
செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
ஆகவே, தங்களின் கணக்கில்
ரூ.10 /-Cerdit ஆகி உள்ளாத
என சரி பார்க்கவும். யாருக்கேனும்
 வரவில்லை எனில் உடனடியாக
நமது மாவட்ட நிர்வாக/சங்க
கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமாய்
 கேட்டுக் கொள்கிறோம்.
                           என்றும் தோழமையுடன்,

       Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU

                                        திருநெல்வேலி மாவட்டம்

Wednesday, 19 November 2014




BSNL JAC 27.11.14 ONEDAY STRIKE

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!


Read | Download

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
வேலூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி

JAC கூட்ட முடிவுகள்





Read | Download

JAC கூட்ட முடிவுகள்
JAC ன் கூட்டம் 18.11.2014 அன்று புது டெல்லியில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள். சுற்றறிக்கை எண்.5

Saturday, 15 November 2014

7 வது AIC-ல் சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்சம்...






அருமைத் தோழர்களே ! கொல் கொத்தாவில் மிகவும் சீரும் சிறப்புமாக நடை பெற்ற  நமது BSNLEU  7 வது AIC-ல் தமிழ் மாநில சங்கம் சார்பாக சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்சம் 
1.ட்ராப் வயர் , 5 pair கேபிள் ,10 pair ,20 pair ,OFC கேபிள் பற்றாக்குறை ,தொலைபேசி இன்ஸ்ட்ருமென்ட்பற்றாக்குறை ,மோடம் பற்றாக்குறையினால் தொலைபேசி பழுதுகளை சரி செய்வது தாமதம்ஆவதால் விரைவில் இப் பற்றாக்குறை சரி செய்யப்படவேண்டும்.
2. தொலைபேசி ஆலோசனை குழுவை கலைக்க வேண்டும் .கலைக்க முடியாவிட்டால் ஆலோசனைகுழு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொலைபேசி இணைப்புகளுக்கான செலவை அரசாங்கம்ஏற்று கொள்ள வேண்டும் .
3. சட்ட பேரவை மற்றும் நாடாளுமண்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொலைபேசிஇணைப்புகளுக்கான செலவையும் அவர்கள் பேசும் தொலை பேசி பில்லுக்கான தொகையையும்அரசே ஏற்று கொள்ள வேண்டும் .
4. சிம் கார்டில் TOPUP செய்யும் போதே Validity period நீட்டிக்க ப்படவேண்டும் 
5.கேபிள் pair இல்லாத பகுதிகளில் குறிப்பாக புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் GPON சிஸ்டம்அதிகப்படுத்த வேண்டும்.
6.தரைவழி இணைப்புகளுக்கு வாடகை குறைக்கப்படவேண்டும்.
7.மின்னணு தொலைபேசி நிலையங்களில் பயன்படுத்தப்படும் ARC மற்றும் ARI கார்டுகளின்பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும் 
8. பிரசவத்திற்கான மருத்துவத்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும்,
9.CSC ஊழியர்களுக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் 
10.NE-12 கிடைக்காத ஊழிய்ரகளுக்கு பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாக ஒருஇன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும் .
11.இதய நோய் தீராத நோய்கள் பட்டியலில் சேர்க்க ப்படவேண்டும்
12.NE-1 முதல் NE-5 வரை உள்ள Pay Scale இல் ஊதிய தேக்கம் களையப் பட வேண்டும்
13.GSLI இல் இழப்பீடு தொகை 3 லட்சமாக Gr "C " மற்றும் Gr "D" ஊழிய்ரகளுக்கு அதிகரிக்கப்படவேண்டும்
14.TM, TTA, JTO ஆளெடுப்பு விதிகளில் தளர்வு செய்யப்பட வேண்டும் .
15.பென்ஷன் கணக்கீட்டில் TSM சேவை காலத்தை முழுமையாக எடுத்து கொள்ள வேண்டும் .
16. BSNL நிறுவனத்தின் சொத்துக்கள் அரசிடம் இருந்து BSNL நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டும் 
17. BTS மற்றும் POWER PLANT பகுதிகளில் பழுதடைந்த பாட்டரி களை மாற்றுவது .
18 கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல் ஊர்களில் HRA மாற்றம் செய்யப்படவேண்டும்
19.மலை பகுதியான நீலகிரி  மாவட்டத்தில் ஊழியர் பற்றாகுறை சரி செய்ய சிறப்பு ஆளெடுப்புநடத்தப்படவேண்டும் .
20.தரை வழி இணைப்பில் ஒரு அழைப்புக்கான காலவரையறை 3 நிமிடங்களாக மாற்றப்படவேண்டும்.
21.முதன்மை சங்கமான நமது BSNLEU   சங்கத்திற்கு விகிதாசார அடிப்படையில் வொர்க்ஸ் கமிட்டிமற்றும் Welfare கமிட்டிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் .
22.அனைத்து கேடர்களுக்கும்(ஓட்டுனர்கள் உட்படமிகுதி நேரப்படி  உயர்த்தப்படவேண்டும் .
23. குறைந்த கட்டண அடிப்படையில் ஆன TOPUP கார்டுகள் வாடிக்கையாளர் சேவை மையங்களில்கிடைக்கவேண்டும் .
24. பரிவு அடிப்படையில் ஆன நியமனங்களை தாமதம் இன்றி நியமிக்க வேண்டும்
25."Payment Basis " அடிப்படையில் கூடுதல் ஆன  மருத்துவ மனைகளை அங்கீகரிக்க வேண்டும் .
26.அனைத்து அலவன்சுகளையும் உயர்த்திட வேண்டும்
27. 3 வது ஊதிய மாற்றத்திற்கு உடனடியாக பேச்சு வார்த்தை துவங்கிட வேண்டும் .
28. ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் பணிக்கேற்ற  semi  skilled / skilled ஊதியம் வழங்க வேண்டும் .
29. பயிற்சி மற்றும் மறு பயிற்சி வாயிலாக RM கேடரில் இருந்து TM கேடருக்கும் , TM கேடரில் இருந்துTTA கேடருக்கும் உயர்நிலைபடுத்தப்படவேண்டும்.
                                இது போன்று மொத்தம் 40 கோரிக்கைகள்  7 வது
 அனைத்திந்திய மாநாட்டில்தமிழ்மாநில சங்கம்
 சார்பாக சமர்பிக்கப்பட்டது


Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU