Saturday 24 August 2013

கம்பெனி விவகாரங்களில் தலையிடுவது இல்லையாம்!




கம்பெனி விவகாரங்களில் தலையிடுவது இல்லையாம்!
அனில் அம்பானியின் மனைவி சொல்கிறார்

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டினா அம்பானி.
புதுதில்லி, ஆக.23-2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜ ரான அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி, கம் பெனி விவகாரங்களில் தலையி டுவதே இல்லை என்று சாட்சி யமளித்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொ டங்கப்பட்டது என்றும் போது மான தகுதி இல்லாமலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக பெற்றதுஎன்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள் ளது. இதில் ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தின் தலைவர் அனில் அம்பானி, மனைவி டினா அம்பானி ஆகியோர் சிபிஐ தரப்பு சாட்சி யமாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாட்சியமளிக்க வரு மாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய பகீரத முயற்சிகளை அனில் அம்பானி யும் மனைவி டினா அம்பா னியும் மேற்கொண்டனர்.ஆனால் எதுவும் பலனளிக் காத நிலையில் வியாழனன்று அனில் அம்பானி சிறப்பு நீதி மன்றத்தில் சாட்சியமளித்தார். அவரிடம் 2 மணி நேரம் நடத் தப்பட்ட விசாரணையில் பெரும்பாலும் எனக்கு நினை வில் இல்லை; எனக்குத் தெரி யாது என்ற பதில்களையே தெரிவித்திருக்கிறார். அதுவும் ஸ்வான் டெலிகாம் என்ற நிறு வனம் பற்றிக் கேள்விபட்டதே இல்லை என்று துணிந்து பொய் கூறினார்.
டினா அம்பானி ஆஜர்

இதனிடையே வெள்ளி யன்று அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி யமளித்தார். அப்போது டினா அம்பானி, “நான் ஒரு சமூக சேவகி சமூக சேவைகளில் ஈடு பட்டுக் கொண்டே குடும்பத்தை யும் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். மேலும் நான் கம் பெனி விவகாரங்களில் எல்லாம் தலையிடுவதும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
தீக்கதீர்

No comments:

Post a Comment