Tuesday, 10 May 2022

 புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்க வேண்டுமென CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியதுடன், DIRECTOR(HR) உடன் பொதுச்செயலரும், துணை பொதுச்செயலரும் விவாதம்

ஊழியர்களுக்கு ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது. ஊழியர்களுக்கு, புதியதொரு பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென மற்றுமொரு கடிதத்தை, 09.05.2022 அன்று, CMD BSNLக்கு எழுதியுள்ள BSNL ஊழியர் சங்கம், அதற்கென கீழ்கண்ட காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளது.

1) அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே NEPP ஒப்பந்தம் ஏற்பட்டு, 14 வருடங்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. அதன் பின் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை, கண்டிப்பாக தேவையான ஒன்றாக உள்ளது.

2) ஊழியர்களுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும், அதிகாரிகளுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

3) NEPPக்குள்ளேயே, DoTயில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், BSNLல் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. DoTயில் பணி நியமனம் செய்யப் பட்டவர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகள் 4 மற்றும் 7 வருடங்கள் கடந்த பின்னர் கிடைக்கும். ஆனால் நேரடி நியமன ஊழியர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகளும், 8-8 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் கிடைக்கும்.

4) கணிசமான ஊழியர்கள், ஊதிய தேக்க நிலையை அடைந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த ஊதிய தேக்க நிலை பிரச்சனை தீர்வு காணப்படவும் புதிய பதவி உயர்வு கொள்கை அவசியம்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணை பொதுச்செயலர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, இந்த பிரச்சனை தொடர்பாக விரிவாக விவாதித்ததுடன், ஊழியர்களுக்கான ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென வலுவாக வற்புறுத்தியுள்ளனர்.

 TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்கும் பிரச்சனை தொடர்பாக, பொதுச்செயலரும், துணைப்பொது செயலரும் DIRECTOR(HR) இடம் விவாதம்

TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரி வருகின்றது. சுமார் 400 TSM தோழர்கள், இவ்வாறு நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். துவக்கத்திலேயே, இந்த பிரச்சனைய, BSNL ஊழியர் சங்கம் கையில் எடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை, தொலை தொடர்பு துறை நிராகரித்து விட்டது.

இந்த பிரச்சனையை மீண்டும் தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் எடுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணைப்பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று திரு அர்விந்த வட்னேர்கர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, மீண்டும் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் ஆவன செய்வதாக DIRECTOR(HR) உறுதி அளித்தார்.