தோழர்களே !வணக்கம் !!
நமது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு மிகவும் எழுச்சியுடன் உற்சாகமாக 22-02-2022 அன்று காலை ஒன்பது மணிக்கு நெல்லை தொலைபேசி நிலையத்தில் உள்ள மாநாட்டு அரங்கம் தோழர் D.கோபாலன் நினைவு அரங்கத்தில் துவங்கியது.
மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் V. ஆண்டபெருமாள் தலைமை தாங்கினார்.
மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசியக்கொடியினை மாவட்டப் பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன் ஏற்றிவைத்தார்.
சங்க கொடியினை மாவட்டத் துணைத் தலைவர் தோழர் E.நடராஜன் ஏற்றி வைத்தார்.
மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகு நாச்சியார் தியாகிகளுக்கு அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.
மாவட்டச் செயலர் தோழர் N. சூசை மரிய அந்தோணி மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து தோழர்களையும் வரவேற்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.
BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.
மாநில தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா சிறப்புரையாற்றினார்.
BSNL பொது மேலாளர் மரியாதைக்குரிய பிஜி பிரதாப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மாநில அமைப்புச் செயலர் தோழியர் V. சீதாலட்சுமி எழுச்சியுரையாற்றினார்.
உயர்திரு S. கிருஷ்ணகுமார் DGM(Admin) ,உயர்திரு G. வீராசாமி DGM(IM) ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.
உயர்திரு M. மணிமாறன் DGM(BBC) வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி , BSNLEU தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
AIBDPA சங்கத்தின் சார்பில் தலைவர்களுக்கு பொன்னாடை போற்றப் பட்டது.
AIBDPA மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி , TNTCWU மாவட்ட செயலர் தோழர் P.ராஜகோபால் , NFTE BSNL மாவட்ட செயலாளர் தோழர் C.நடராஜன், AIGETOA மாவட்ட செயலாளர் தோழர் K. விஜய் மணிகண்ட ராஜ், SNEA BSNL மாவட்ட செயலாளர் தோழர் V. பாலசுப்ரமணியன், SEWA BSNL மாவட்டச் செயலர் தோழர் K விஜய் , AIBSNLEA மாவட்டச் செயலாளர் தோழர் N. அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆய்வுப் பொருளாக :-
1.செயல்பாட்டு அறிக்கை
2.அமைப்பு நிலைவிவாதம்
3. வரவு செலவு கணக்கு
4. நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெற்றது.
தோழர் S.சங்கரநாராயணன் மாவட்டப் பொருளாளர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகளாக
தோழர் V. ஆண்டபெருமாள் , மாவட்டத் தலைவராகவும்,
தோழர் N.சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலராகவும்,
தோழர் M.நாசர் தீன், மாவட்டப் பொருளாளராகவும் உள்ளிட்ட 19 தோழர்கள்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டின் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் P. அலாவுதீன் நன்றியுரையாற்றினார் .
மாவட்ட மாநாடு மாலை ஆறு மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.
கலந்துகொண்ட அத்தனை அதிகாரிகளுக்கும்,தலைவர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும், மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்
N. சூரிய மரிய அந்தோணி ,
மாவட்ட செயலர்,
BSNLEU ,
திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்.
22-02-2022.