Tuesday, 10 May 2022

 புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்க வேண்டுமென CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியதுடன், DIRECTOR(HR) உடன் பொதுச்செயலரும், துணை பொதுச்செயலரும் விவாதம்

ஊழியர்களுக்கு ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது. ஊழியர்களுக்கு, புதியதொரு பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென மற்றுமொரு கடிதத்தை, 09.05.2022 அன்று, CMD BSNLக்கு எழுதியுள்ள BSNL ஊழியர் சங்கம், அதற்கென கீழ்கண்ட காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளது.

1) அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே NEPP ஒப்பந்தம் ஏற்பட்டு, 14 வருடங்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. அதன் பின் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை, கண்டிப்பாக தேவையான ஒன்றாக உள்ளது.

2) ஊழியர்களுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும், அதிகாரிகளுக்கான பதவி உயர்வு திட்டத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

3) NEPPக்குள்ளேயே, DoTயில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், BSNLல் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. DoTயில் பணி நியமனம் செய்யப் பட்டவர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகள் 4 மற்றும் 7 வருடங்கள் கடந்த பின்னர் கிடைக்கும். ஆனால் நேரடி நியமன ஊழியர்களுக்கு முதல் இரண்டு பதவி உயர்வுகளும், 8-8 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் கிடைக்கும்.

4) கணிசமான ஊழியர்கள், ஊதிய தேக்க நிலையை அடைந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த ஊதிய தேக்க நிலை பிரச்சனை தீர்வு காணப்படவும் புதிய பதவி உயர்வு கொள்கை அவசியம்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணை பொதுச்செயலர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, இந்த பிரச்சனை தொடர்பாக விரிவாக விவாதித்ததுடன், ஊழியர்களுக்கான ஒரு புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்கப்பட வேண்டுமென வலுவாக வற்புறுத்தியுள்ளனர்.

 TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்கும் பிரச்சனை தொடர்பாக, பொதுச்செயலரும், துணைப்பொது செயலரும் DIRECTOR(HR) இடம் விவாதம்

TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரி வருகின்றது. சுமார் 400 TSM தோழர்கள், இவ்வாறு நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். துவக்கத்திலேயே, இந்த பிரச்சனைய, BSNL ஊழியர் சங்கம் கையில் எடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை, தொலை தொடர்பு துறை நிராகரித்து விட்டது.

இந்த பிரச்சனையை மீண்டும் தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் எடுக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் துணைப்பொது செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் ஆகியோர், 09.05.2022 அன்று திரு அர்விந்த வட்னேர்கர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து, மீண்டும் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளர் மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில் ஆவன செய்வதாக DIRECTOR(HR) உறுதி அளித்தார்.

Tuesday, 22 March 2022

சங்கத்தின் அமைப்பு தினம்

 


நெல்லை தொலைபேசி நிலையத்தில் தோழர் முத்துதிருபரன் தலைமையில் தோழர் P. ராஜகோபால் சங்க கொடியை ஏற்றினார்

Thursday, 10 March 2022

கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்*

 *கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்* 

-----------------------------------------------------------------

நெல்லை மாவட்டம்

-----------------------------------

 *BSNLEU - AIBDPA  - TNTCWU* ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை ஸ்ரீபுரம் தொலைபேசி நிலையம் முன்பு இன்று 10.03.2022   மதியம் சுமார் 1.30 மணியளவில்  கருப்பு அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


AIBDPA மாவட்ட செயலர் *தோழர் ச.முத்துசாமி*  தலைமை தாங்கினார். 


BSNLEU  மாவட்ட செயலர் *தோழர்* 

 *N.சூசை மரிய அந்தோணி*  வரவேற்புரை நிகழ்த்தினார்.


BSNLEU மாநில அமைப்பு செயலாளர் *தோழியர் V சீதாலட்சுமி* கோரிக்கையை விளக்கிப் பேசினார். 


TNTCWU மாவட்ட செயலர் *தோழர் P. ராஜகோபால்* நன்றி கூறினார். 


அதன் பின்னர்  *GM அவர்களிடம் மெமோரான்டம்* கொடுக்கப்பட்டது.


இவண்

 *BSNLEU-AIBDPA-TNTCWU* 

ஒருங்கிணைப்புக் குழு

நெல்லை மாவட்டம்.

 _10-03-2022._

Monday, 28 February 2022

ALTTC, BSNL வசமே இருக்கும்

 

ALTTC, BSNL வசமே இருக்கும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள். AUABயின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ALTTC பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என DoT, இன்று (25.02.2022) ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது. ALTTC, BSNL வசமே இருக்கும் என்பதே அதன் பொருள். நிரந்தரமாக ALTTC, BSNL வசமே இருப்பதை AUAB உறுதி செய்யும்.

Wednesday, 23 February 2022

*10 வது மாவட்ட மாநாடு


தோழர்களே  !வணக்கம் !!

 நமது  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு மிகவும் எழுச்சியுடன் உற்சாகமாக 22-02-2022 அன்று காலை ஒன்பது மணிக்கு நெல்லை தொலைபேசி நிலையத்தில் உள்ள மாநாட்டு அரங்கம் தோழர் D.கோபாலன் நினைவு அரங்கத்தில் துவங்கியது.

மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் தோழர் V. ஆண்டபெருமாள் தலைமை தாங்கினார்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசியக்கொடியினை மாவட்டப் பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன் ஏற்றிவைத்தார்.

 சங்க கொடியினை மாவட்டத் துணைத்  தலைவர் தோழர் E.நடராஜன் ஏற்றி வைத்தார்.

 மாவட்ட உதவி செயலர் தோழர் S.அழகு நாச்சியார் தியாகிகளுக்கு அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

 மாவட்டச் செயலர் தோழர் N. சூசை மரிய அந்தோணி மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து தோழர்களையும்  வரவேற்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

 BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.

 மாநில தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா சிறப்புரையாற்றினார்.

 BSNL பொது மேலாளர் மரியாதைக்குரிய பிஜி பிரதாப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 மாநில அமைப்புச் செயலர் தோழியர் V. சீதாலட்சுமி எழுச்சியுரையாற்றினார்.

 உயர்திரு S. கிருஷ்ணகுமார் DGM(Admin) ,உயர்திரு G. வீராசாமி DGM(IM) ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.

 உயர்திரு M. மணிமாறன் DGM(BBC) வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.

BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி , BSNLEU தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

AIBDPA சங்கத்தின் சார்பில் தலைவர்களுக்கு பொன்னாடை போற்றப் பட்டது.

 AIBDPA மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி , TNTCWU  மாவட்ட செயலர் தோழர் P.ராஜகோபால் , NFTE BSNL மாவட்ட செயலாளர் தோழர் C.நடராஜன், AIGETOA மாவட்ட செயலாளர் தோழர் K. விஜய் மணிகண்ட ராஜ், SNEA BSNL மாவட்ட செயலாளர் தோழர் V. பாலசுப்ரமணியன், SEWA BSNL மாவட்டச் செயலர் தோழர் K  விஜய் , AIBSNLEA மாவட்டச் செயலாளர் தோழர் N. அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆய்வுப் பொருளாக :-

1.செயல்பாட்டு அறிக்கை
2.அமைப்பு நிலைவிவாதம்
3. வரவு செலவு கணக்கு
4. நிர்வாகிகள் தேர்வு  ஆகியவை நடைபெற்றது.

தோழர் S.சங்கரநாராயணன் மாவட்டப் பொருளாளர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகளாக
 தோழர் V. ஆண்டபெருமாள் , மாவட்டத் தலைவராகவும்,
 தோழர் N.சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலராகவும்,
 தோழர் M.நாசர் தீன், மாவட்டப் பொருளாளராகவும் உள்ளிட்ட 19 தோழர்கள்
ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 மாநாட்டின் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் P. அலாவுதீன் நன்றியுரையாற்றினார் .

மாவட்ட மாநாடு மாலை ஆறு மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.

 கலந்துகொண்ட அத்தனை அதிகாரிகளுக்கும்,தலைவர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும், மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி தோழர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

 தோழமையுடன்
 N. சூரிய மரிய அந்தோணி , 
மாவட்ட செயலர்,
 BSNLEU ,
திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்.
 22-02-2022.