Thursday, 30 April 2020

வருமான வரி திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு





BSNL ஊழியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, வருமான வரி 

திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு


வருமான வரி திட்டத்தில் சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, வருமான வரித்திட்டத்தில் ஊழியர்கள் புதிய திட்டத்திலோ அல்லது பழைய திட்டத்திலோ வருமான வரி தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. எந்த திட்டத்தில் தொடர்கிறார்கள் என ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்க 28.04.2020 தான் கடைசி தேதி என கார்ப்பரேட் அலுவலகம் 20.04.2020 அன்று கடிதம் வெளியிட்டிருந்தது. நேரப்பற்றாக்குறையையும், கொரோனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் சுட்டிக்காட்டி, இதற்கான கடைசி தேதியை, குறைந்த பட்சம் ஒரு மாத காலமாவது நீட்டித்து அறிவிக்க வேண்டும் என BSNLஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள Sr.GM(Taxational) அவர்களுக்கு கடிதம் எழுதியது.

இதனை ஏற்றுக் கொண்ட கார்ப்பரேட் அலுவலகம், அந்த தேதியினை 3105.2020 வரை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்




அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ”மே” தின வாழ்த்துக்களை  திருநெல்வேலி மாவட்ட்ச  ங்கம் உரித்தாக்கிக் கொள்கிறது.

தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்




தோழர் S.செல்லப்பா பணி ஓய்வு பெறுகிறார்

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவரும், அகில இந்திய உதவி பொதுச்செயலாளருமான அருமை தோழர் S.செல்லப்பா 30.04.2020 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரது பணி ஓய்வு காலம், இந்த மானுடம் சிறக்க செம்மையாய் அமையட்டும் என நெல்லை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.













Monday, 20 April 2020

Food materials distributed to contract workers in Tirunelveli, Virudhunagar and Madurai districts of Tamil Nadu circle.

View File
Food materials were distributed to contract workers in Tirunelveli, Virudhunagar and Madurai districts of Tamil Nadu circle on 17.04.2020. At Palayamkotai (Tirunelveli SSA) food materials worth Rs.1,000/- were distributed to each of the 50 contract workers. Com.V.Seethalakshmi, COS, BSNLEU, Com.D. Gopalan, DS, AIBDPA and Com.P.Rajagopal, DS, TNTCWU, were present. In Madurai, food materials worth Rs.700/- were distributed to each of the 30 contract workers. Com.C. Selvin Sathyaraj, DS, BSNLEU, Com.Manuel Palraj, DS, AIBDPA and Com.Sonaimuthu, DS, TNTCWU, were present. In Sivakasi (Virudhunagar SSA), relief materials worth Rs.1,000/- each were distributed to the contract workers. Com.A. Samuthrakani, DS, BSNLEU, Com.M.Ayyasami, DS, AIBDPA and Com.M.Muthusami, DS, TNTCWU, participated in the programme.    CHQ heartily congratulates all these district unions.

[Date : 18 - Apr - 2020]

BSNL Employees Union (CHQ), New Delhi





BSNL Employees Union (CHQ), New Delhi

calendar 20 - Apr - 2020
BSNLEU demands the sanctioning of one day's salary to all BSNL employees..

Since telecommunication is an essential service, the employees of BSNL are engaged in providing service to the people, despite a nationwide lock-down has been imposed. To ensure that they do not contract the infection of Corona Virus, BSNL employees need to use masks, gloves, sanitizer, liquid soap, etc. on a daily basis. They are spending money from their pockets for this. BSNLEU has demanded that, the BSNL Management should immediately sanction one day's salary (Basic Pay +DA) to all the BSNL employees, to enable them to meet the expenditure for purchasing the above items. BSNLEU has informed the Management that the other Public Sector Enterprises, viz., LIC of India, State Bank of India and the Union Bank of India have already sanctioned such a lumpsum grant.

Monday, 6 April 2020

ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களை பட்டினியில் இருந்து பாதுகாப்போம்



நாடு முழுவதும் BSNLல் உள்ள 40,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, கடந்த பத்து மாதங்களில் இருந்து 14 மாதங்கள் வரை ஊதியம் தராத அவல நிலை தொடர்கிறது.  நிறுவனத்தின் நிதி நிலையினை காரணம் காட்டி கார்ப்பரேட் அலுவலகம் அவர்களுக்கான நிதியினை ஒதுக்க அக்கறை எடுப்பதில்லை.
இந்த பிரச்சனை பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.  ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டிய பொறுப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு தான் உள்ளது என்றும், BSNL நிர்வாகத்தின் பொறுப்பு இல்லை என்று பாராளுமன்றத்தில், மத்திய அமைச்சர் பதில் அளிக்கிறார்.  ஒப்பந்தக் காரர்களின் பில்களை BSNL நிர்வாகம் தீர்வு காணாமல், அவர்கள் எவ்வாறு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தருவார்கள்?  மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் கூட தராமல், அவர்களை பெரும் எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்கிறது.  நிர்வாகத்தின் இந்த பாரபட்சமான, பொறுப்பற்ற தன்மை காரணமாக இதுவரை பத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது போன்ற சம்பவங்கள், இந்திய நாட்டின் எந்த ஒரு பொதுத்துறையிலும் இதுவரை நடைபெற்றதில்லை.  இந்த பத்து மரணங்களுக்கும், அரசாங்கமும், BSNL நிர்வாகமுமே பொறுப்பாகும்.
அரசாங்கம் விடுத்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு என்பது இவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.  இதனால் மேலும் தற்கொலைகள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் எழுகிறது.  எனவே, இந்த ஊரடங்கு காலத்தில், இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட தேவையான நிதியினை திரட்டிட BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவி செய்திட தேவையான நிதியினை நிரந்தர ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றோர்களிடம் திரட்டிட BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
பல மாநிலங்கள் இந்த நிதியினை திரட்டிட அக்கறையுடன் முயற்சி செய்து வருகின்றன.  அதற்கு அனைவரின் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.  ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.  எனவே நன்கொடை வசூலை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  நாம் ஒவ்வொருவரையும் அணுக வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் பட்டினியில் இருந்தும் தற்கொலைகளில் இருந்தும் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும்.  எனவே, ஒப்பந்த ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்ற தாராளமாக நிதியுதவி செய்திட வேண்டும் என ஊழியர்களையும், நல விரும்பிகளையும் BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.


ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 04.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்
’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு04.04.2020 அன்று தமிழகத்தில் நமது மாவட்ட சங்கங்கள் திரட்டிய நிதியின் விவரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.. நிதி வழங்கிய தோழர்களுக்கும், அதற்கான பெரு முயற்சி எடுத்துவரும் மாவட்ட சங்கங்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். இன்னமும் அதிகமான நிதியினை திரட்டிடுவோம்.

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்



ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு தமிழகத்தில் 05.04.2020 அன்று திரண்ட நிதி விவரம்
ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு 05.04.2020 அன்று தமிழகத்தில் நமது மாவட்ட சங்கங்கள் திரட்டிய நிதியின் விவரத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.. நிதி வழங்கிய தோழர்களுக்கும், அதற்கான பெரு முயற்சி எடுத்துவரும் மாவட்ட சங்கங்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பெருமளவில் நிதி திரட்டப்பட்டிருந்தாலும், அது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் உள்ளது.

Friday, 3 April 2020

’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”





’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”
அன்பார்ந்த தோழர்களே,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய பிடித்தம் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் முழு ஊதிய வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நமது BSNLல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 முதல் 14 மாதங்கள் வரை ஊதியம் தராமல் உள்ள நிலை தொடர்கிறது. 

கொரோனா பாதிப்பின் காரணமாக மேலும் பாதிப்படைந்துள்ள, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்து அதற்கான நிதியினை திரட்ட அறைகூவல் விடுத்துள்ளது. ஒரு குறுகிய கால இடைவெளியில் நமது தமிழகத்தில் இதுவரை 1,57,333 ரூபாய்கள் நிதியாக குவிந்துள்ளது. இதற்காக நிதி உதவி அளித்திட்ட அனைவருக்கும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக நெல்லை மாவட்ட சங்கத்திற்கும், வழி காட்டியுள்ள பல்லடம் கிளை சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். 

ஆனால் இன்னமும் ஒரு சில மாவட்டங்கள் தங்கள் கணக்கை துவங்க கூட இல்லை. அனைத்து மாவட்டங்களிலும், தங்களின் முழு சக்தியை திரட்டி வசூலிக்க வேண்டி உள்ளது. விரைவாக செய்ய வேண்டிய பணி இது. ஊரடங்கு என்கிற தடை நம்முன் உள்ளது. தடைகளை தகர்த்தெறிந்து எப்போதும் முன்னேறி வரும் நாம், இந்த தடையையும் தாண்டி நமது தோழர்களின் நலன்களுக்காக உடனடியாக நிதி திரட்டிடுவோம். 

நமது ஊழியர்கள், நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தோழர்கள், அதிகாரிகள் மற்றும் அனைவரிடமும் நாம் இதற்கான நிதியினை பெற்று அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விரைவில் உதவிடுவோம்..

ஒப்பந்த தொழிலாளர் நிவாரண நிதிக்கு





ஒப்பந்த தொழிலாளர் நிவாரண நிதிக்கு 01.04.2020 மாலை 06.00 மணி வரை வந்த நிதி
’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி’க்கு மாலை 6 மணி வரை வந்துள்ள நிதி விவரம்:-
முன் வரவு 65,333
தோழர் S.அஸ்லாம் பாஷா DS BSNLEU திருச்சி 2,500
தோழர் V.ரவி Retd TT ஈரோடு 1,000
தோழர் K.பழனிக்குமார் COS BSNLEU மதுரை 3,000
தோழர் P.ராஜகோபால் ADS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் P.ராஜு DS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் P.A.ராஜா முகமது BS சங்கரன் கோவில் நெல்லை 2,000
தோழர் அய்யப்ப ராஜா JE புளியங்குடி நெல்லை 1,000
தோழர் அருண் JE சங்கரன் கோவில் நெல்லை 1,000
தோழர் E.நடராஜன் ADS BSNLEU திருநெல்வேலி 2,000
தோழர் S.K.மாரியப்பன் Retd OS திருநெல்வேலி 2,000
தோழர் மகேஷ் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை Retd JE திருநெல்வேலி 2,000
தோழர் V.ராமநாதன் Retd TT திருநெல்வேலி 1,000
தோழர் R.தமிழ்செல்வி த/பெ C.ராமசந்திரன் கும்பகோணம் 1,000
தோழர் R.ராஜேஸ்வரி, க/பெ C.ராமசந்திரன் கும்பகோணம் 1,000
தோழர் R.சுயம்புலிங்கம் ADS BSNLEU நாகர்கோவில் 1,000
தோழர் கணேசன் DVP BSNLEU திருநெல்வேலி 1,000
கோவை மாவட்டம் பல்லடம் கிளை 21,500
தோழர் K.ஜார்ஜ் DP BSNLEU நாகர்கோவில் 2,000
தோழர் M.மல்லிகா Retd JTO புதுக்கோட்டை திருச்சி 5,000
தோழர் P.சின்னதுரை நாகர்கோவில் 1,000
தோழர் S.பிரதீப் குமார் நாகர்கோவில் 1,000
தோழர் V.ஞானமணி பூதபாண்டி நாகர்கோவில் 1,000
தோழர் B.சுப்ரமணியன் Retd OS நாகர்கோவில் 2,000
தோழர் செல்வராஜ் Retd OS நாகர்கோவில் 2,000
தோழர் I.அந்தோணி மைக்கேல் OS நாகர்கோவில் 1,000
தோழர் S.சுகுமார் நாகர்கோவில் 1,000
தோழர் அபிராம சுந்தரி,OS சேலம் 3,000
தோழர் T.பிரேமா CVP BSNLEU சென்னை 2,000
தோழர் பூம்பாவை Retd OS புதுக்கோட்டை, திருச்சி 2,000
தோழர் A.குருசாமி TT சிவகாசி 3,000
தோழர் A.சுப்ரமணியன் DS BSNLEU பாண்டிச்சேரி 1,000
தோழர் A.P. கலாராணி OS பாண்டிச்சேரி 3,000
தோழர் V.ராமகிருஷ்ணன் Retd SDE பாண்டிச்சேரி 2,000
தோழர் M.நாசர்தீன் BS BSNLEU தென்காசி நெல்லை 1,000
தோழர் கோமதி நாயகம் TT சங்கரன்கோவில் நெல்லை 1,000
தோழர் S.கந்தம்மாள் BT BSNLEU சங்கரன் கோவில் நெல்லை 1,000
தோழர் M.முத்தையா Retd AO திருநெல்வேலி 3,000
தோழர் S.குத்தாலிங்கம் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் T.செந்தில்குமார் DOS BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் P.சூசை DVP BSNLEU திருநெல்வேலி 1,000
தோழர் S.P.கணேசன் BS BSNLEU AMBAI திருநெல்வேலி 1,000
தோழர் அருட்பெருஞ்சோதி DP BSNLEU கும்பகோணம் 2,000
தோழர் சற்குணவதி கனகசபை BSNL WWCC கடலூர் 2,000
மொத்தம் 1,57,333/-



It is very sorry to inform you that Sri.V.Raju ITS, previous CGM TN CIRCLE passed away yesterday due to severe heart attack.