COVID-19
வெகு வேகமாக
பரவுகிறது- LIC ப்ரீமியம்களை மேலும் காலதாமதமின்றி
செலுத்த வேண்டும் என BSNLஊழியர் சங்கம், CMD
BSNLக்கு கடிதம்
2019, மே மாதம் முதற் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம்
செய்யப்பட்ட LIC
ப்ரீமியம்களை, BSNL நிர்வாகம் LICயில் செலுத்தாமல் இருந்தது.
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் தவணைகள் LICயிடம் செலுத்தப்பட்டிருந்தாலும், பணியில் உள்ள ஊழியர்களின் தவணைகள்
இன்னமும் செலுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம்
செய்யப்பட்ட LIC
தவணைகளை
உடனடியாக அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய இழப்பை சந்தித்துவிடக்கூடாது
என வழிகாட்டி தொழிலாளர் நல மற்றும் நிதி அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின்
பின்னணியில், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில்
உள்ள பத்து மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.