Monday, 26 August 2019





 நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ,



BSNL ஊழியர் சங்கம் . திருநெல்வேலி மாவட்டம்.

 நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு

கூட்டம் 27/08/2019 அன்று காலை 10.00 மணிக்கு 

நமது சங்க அலுவலகத்தில் நடைபெறும் .மாவட்ட

சங்க நிர்வாகிகள். கிளைச் செயலாளர் கள் மற்றும்

முன்னனி உறுப்பினர் கள் , தோழர்கள் அனைவரும்

குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.


 'மாவட்ட செயலாளர்.'






Friday, 16 August 2019

திருநெல்வேலி யில் தேர்தல் சிறப்பு க்கூட்டம்



திருநெல்வேலி யில்  தேர்தல் சிறப்பு க்கூட்டம்










தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாட்டில் நந்தீஸ்-சுவாதி நினைவு ஜோதியை நம் மாநிலதலைவர். தோழர். S.செல்லப்பா பெற்றுக்கொண்டார்


Thursday, 15 August 2019

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்






விடுதலை போராட்ட தியாகிகளின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி, அவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்போம்.

Monday, 12 August 2019

As has already been announced, BSNLEU and BSNLCCWF are organising March to Labour Commissioners’ offices tomorrow, demanding immediate payment of wage arrears to contract workers and also to stop their retrenchment. At the end of the rallies, a memorandum is to be submitted to the Deputy Labour Commissioner / Regional Labour Commissioner / Assistant Labour Commissioner / Labour Enforcement Officer, as the case may be. A copy of the memorandum to be submitted tomorrow is attached herewith. It is already sent to the circle secretaries and central office bearers on Whatsapp also. All circle and district secretaries are requested to organise the rallies tomorrow and submit the memorandum. Report and photos may be sent to the CHQ promptly.

Sunday, 4 August 2019

13.08.2019 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கிய பேரணி






ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத காலம் ஊதியம் தராத பிரச்சனைக்காக 13.08.2019 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கிய பேரணி
பூனே நகரத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு, கடந்த ஏழு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தராத பிரச்சனையை விவாதித்தது. BSNL ஊழியர் சங்கம், BSNL CCWF உடன் இணைந்து 16.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் துவங்கி அனைத்து மாவட்ட/ மாநில தலைநகர்களிலும் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. எனினும் இந்த பிரச்சனையில் தீர்வு காணப்படவில்லை. எனவே விரிவடைந்த மத்திய செயற்குழு, ALC/RLC/Dy.LC அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தை 13.08.2019 அன்று நடத்துவது என BSNL ஊழியர் சங்கமும் BSNL CCWFம் இணைந்து முடிவு செய்துள்ளன. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாநில/ மாவட்ட சங்கங்கள் திட்டமிட வேண்டும். எந்த நகரத்தில் தொழிலாளர் நல அலுவலகங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும். அங்குள்ள அதிகாரிகளிடம், ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை பிரச்சனையில் தலையிட வேண்டுமென கேட்டு மனு ஒன்றையும் நமது சங்கங்கள் வழங்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில மட்டங்களில் இருந்து ஒப்பந்த ஊழியர் பிரச்சனையை அகில இந்திய பிரச்சனையாக எடுத்துள்ள மத்திய சங்கத்தை வாழ்த்துவதோடு, இந்த இயக்கங்களை புத்துணர்ச்சியோடு பெரிய அளவிலான தோழர்களை பங்கேற்க செய்து வெற்றிகரமாக்கிட வேண்டுமென தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Friday, 2 August 2019

07.08.2019 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அகில இந்திய AUAB அறைகூவல்

07.08.2019 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அகில இந்திய AUAB அறைகூவல்



07.08.2019 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டங்கள் அகில இந்திய AUAB அறைகூவல்


1) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு, 2000-மாவது ஆண்டில் மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்று.
அ) சேவைகளை பராமரிக்க தேவையான உதவிகளை உடனடியாக BSNLக்கு வழங்கு
ஆ) தனது முதலீட்டு செலவுகளுக்காக BSNL நிறுவனத்திற்கு மென் கடன் வழங்கு.
2)
முதலீட்டு செலவினங்களுக்கு BSNL நிறுவனம் விதித்துள்ள ஒட்டு மொத்த தடையை நீக்கு. வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ள இடங்களில் முதலீட்டு செலவினங்களை செய்ய தலமட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி கொடு.
3)
ஆட்குறைப்பை செய்யாதே. BSNL உருவாகும் போது பணிப்பாதுகாப்பு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று.
4)
சட்ட பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கூட அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிடு.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 07.08.2019 அன்று நாடு தழுவிய அளவில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமும் வாயிற்கூட்டமும் நடத்த AUAB அறைகூவல் விடுத்துள்ளது
வெற்றிகரமாக்குவோம்.