8வது உறுப்பினர் சரிபார்ப்பு
8வது உறுப்பினர் சரிபார்ப்பு தொடர்பான ஒரு கூட்டம் புது டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் 27.05.2019 அன்று நடைபெற்றது. GM(SR) திரு A.M.குப்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஒரு சில சங்கங்கள் 8வது உறுப்பினர் சரிபார்ப்பை ஒத்தி வைக்க கோரின. ஆனால் BSNLEU, NFTE உள்ளிட்ட பெரிய சங்கங்கள் அனைத்தும் உறுப்பினர் சரிபார்ப்பினை ஒத்தி வைக்கக் கூடாது என வலியுறுத்தின. 8வது உறுப்பினர் நடத்துவது தொடர்பான ஒரு கால அட்டவணையை நிர்வாகம் முன் மொழிந்தது. அதன்படி 03.06.2019 அன்று நிர்வாகம் 8வது உறுப்பினர் சரிபார்ப்பிற்கான அறிவிப்பை வெளியிடும். 18.09.2019 அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். BSNL ஊழியர் சங்கமும் NFTE சங்கமும் அறிவிப்பு வெளியிட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்து சரிபார்ப்பு நிகழ்வுகளும் நிறைவு பெற வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனை பரிசீலிக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.