Thursday, 21 March 2019

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி ! BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளரும், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான தோழர். எம். முருகையா சமீப கால உடல் நலக் குறைவினால் பாதிக்கப் பட்டு, 21.3.2019 அன்று மாலை காலமானார் என்ற துயரச் செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடிமட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடியவரும், பொதுவுடைமைக் கொள்கையில் உறுதியோடு இருந்தவருமான தோழர். முருகையாவுக்குச் செவ்வணக்கம் !