Friday, 14 September 2018

ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின்



BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது  ஊதிய
மாற்றத்திற்கான  5வதுகூட்டம்.

ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின் 5வது கூட்டம்  முன்னதாக
திட்டமிட்டபடி  ஊதிய மாற்றக் கூட்டுக்குழு   ஐந்தாவது
முறையாக இன்று14.09.2018 பிற்பகல்  2.00  மணி அளவில்
கூடியது.
இன்றைய   கூட்டத்தில்       ஊழியர் தரப்பு
உறுப்பினர்கள்  10.09.2018 அன்றைய கூட்டத்தில் நிர்வாகத்தரப்பு
சார்பாக  முன்மொழியப்பட்டஊதிய  நிலைகளை ஏகமனதாக
ஏற்றுக்  கொண்டனர்.  எனினும் ஊதிய நிலைகளில் தேக்கநிலை
ஏற்படுவதற்கான வாய்ப்புகள்ஏதும் உள்ளதா என ஆராய்வதற்காக

ஒரு கால  அவகாசத்தை ஊழியர் தரப்பு கோரியுள்ளது.
அடுத்த கூட்டம் 28.09.2018 அன்று நடைபெறும்.

இந்நிலையில் படிகள்திருத்தம்  (ALLOWANCES)குறித்து
ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்26.09.2018 அன்று  கூடி விவாதிக்கவுள்ளனர்.