வெற்றிக்கு ஆயிரம்
சொந்தம்...
’வெற்றிகு ஆயிரம் சொந்தம் இருக்கும். ஆனால்
தோல்வி அனாதையாக நிற்கும்’ என்று ஒரு பேச்சு மொழி உள்ளது. இது சரி என
மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. BSNL ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தில் AUAB ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய
மாற்றம் நடைபெற்ற பின்னரே ஓய்வூதியர்கள், ஓய்வூதிய மாற்றத்தை பெறுவார்கள் என தொலை தொடர்பு துறை இதுவரை நிலைபாடு
எடுத்திருந்தது. இதன BSNL
CMDக்கு எழுத்து
பூர்வமாகவே தொலை தொடர்பு துறை தெரிவித்திருந்தது. பணியில் இருக்கும் ஊழியர்களின்
ஊதிய மாற்றத்தோடு, ஓய்வூதிய மாற்றத்தை இணைக்கக்கூடாது என BSNL ஊழியர் சங்கம் ஒரு உறுதியான நிலை
எடுத்திருந்தது. இதனை போலவே வேறு பல அமைப்புகளும் நிலை எடுத்திருந்தன. ஆனால் AUAB கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் மூலமாகவே இந்த
பிரச்சனை தீர்வு காணப்பட்டுள்ளது என அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் உள்ள
ஊழியர்களும், அதிகாரிகளும் கால வரையற்ற வேலை
நிறுத்தத்திற்காக நடத்திய கடுமையான தயாரிப்பு பணிகள் அரசுக்கு கொடுத்த பெரும்
நெருக்கடி காரணமாகவே தொலை தொடர்பு செயலாளர் 02.12.2018 அன்று AUAB தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அந்தக் கூட்டத்தில் தான் ஓய்வூதிய
மாற்றத்தை பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் இருந்து பிரித்து
பார்க்கப்படும் என தொலை தொடர்பு துறை முடிவெடுத்துள்ளதாக தொலை தொடர்பு துறை
செயலாளர் முதன் முறையாக தெரிவித்தார். இது தான் நடந்த உண்மை. எனினும், நாடு முழுவதும் உள்ள ஊழியர்களும் அதிகாரிகளும் AUABயின் தலைமையில் எடுத்த கடும் முயற்சிகளை
அங்கீகரிக்காமல் ஒரு சிலர் இது தங்களின் வெற்றி எனக் கூறுவது நகைப்பிற்குரியது.