Friday, 26 June 2015

BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை

 BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை



ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்

Wednesday, 10 June 2015

Timely payment of Wages to Contract Labours



Timely payment of Wages to Contract Labours - Circle office instructions : Click here.

10.06.15 போராட்ட ஒத்திவைப்பு குறித்து மாநிலசங்கம்...



10.06.15 போராட்ட ஒத்திவைப்பு குறித்து மாநிலசங்கம்...

அருமைத் தோழர்களே! நமது தமிழ் மாநில அளவில் சென்னையில்   10.06.15 அன்று நடக்க இருந்த இணைந்த போராட்ட ஒத்திவைப்பு குறித்து நமது BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...



10.06.15 சென்னை தார்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

அருமைத் தோழர்களே ! 08.06.2015 அன்று  தமிழ் மாநில   CGMயுடன் நமதுதொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில்நிர்வாகத்திடம் இருந்து பதில் வந்துள்ளதால் 10-06-2015 அன்று நடைபெறஇருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்றுநடைபெறுகின்றது என நமது மாநிலசங்கம் அறிவித்துள்ளது.