பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)
காலியிடங்கள்: 400
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ்,கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லதுபி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்கவேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/ export/sites/default/ BSNL/ about _us/ hrd/ pdf/ MTExternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.