Friday, 30 May 2014

Expected IDA From July 2014 for CPSU Employees



Expected IDA From July 2014 for CPSU Employees


The Expected IDA w.e.f. 01-July-2014 depends upon the Average All India Consumer Price Index Numbers (Industrial Worker) of the months March-2014, April-2014 & May-2014.The AICPINs of the months March-2014 has been declared on 30-April-2014 and increased by 1 point. The AICPINs of the months April-2014 & May-2014 are likely to be declared at the end of the month May-2014 & June-2014 respectively. The expected IDA may increase by 0.8 to 4.0%. Even if there is no increase in AICPINs in April-2014 & may-2014, it will be increased by 0.8%.

Top 20 Projections:

S.N.
Avg. AICPIN
Projected
Projected
IDA (%)
Projected
IDA Increase (%)
1238.0088.40.0
2238.3388.70.3
3238.6788.90.5
4239.0089.20.8
5239.3389.51.1
6239.6789.71.3
7240.0090.01.6
8240.3390.21.8
9240.6790.52.1
10241.0090.82.4
11241.3391.02.6
12241.6791.32.9
13242.0091.63.2
14242.3391.83.4
15242.6792.13.7
16243.0092.44.0
17243.3392.64.2
18243.6792.94.5
19244.0093.14.7
20244.3393.45.0

Friday, 23 May 2014

புதிய தலைமை பொது மேலாளர்




பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொது மேலாளர் பொறுப்பேற்பு
  • First Published: May 21, 2014 2:21 AM
  • Last Updated: May 21, 2014 2:21 AM
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.வி.ரெட்டி அண்மையில் பொறுப்பேற்றார்.
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.வி.ரெட்டி அண்மையில் பொறுப்பேற்றார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பொறுப்பு வகித்த அஷ்ரஃப் கான், பி.எஸ்.என்.எல். தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக (நியூ பிஸினஸ்) பதவி உயர்வு பெற்றதால், அவரது பொறுப்புக்கு ஜி.வி.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
1980-ஆம் ஆண்டு இந்திய தொலைதொடர்பு பணிக்குத் (.டி.எஸ்) தேர்வான ஜி.வி.ரெட்டி நாகாலாந்து, கடப்பா, ஹைதராபாத், செகந்தராபாத், பெங்களூரு பி.எஸ்.என்.எல் வட்டங்களில் பொது மேலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
இந்திய தொலை தொடர்பு நிறுவனத்தின் (டி.சி..எல்.) திட்ட மேலாளராகப் பணியாற்றியுள்ள ஜி.வி.ரெட்டி, இதற்கு முன்பு பி.எஸ்.என்.எல். (தெற்கு மண்டலம்) தலைமை பொது மேலாளராக பதவி வகித்துள்ளார்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.


Wednesday, 21 May 2014

அர்த்தமுள்ள வாழ்வு ........



அர்த்தமுள்ள வாழ்வு ........
---------------------------------------------------------------------------------

தோழர் ஆர் உமாநாத் மறைவு . ஒரு லட்சியவாதியின் தொடர் ஓட்டம் முடிந்தது . அதே தீப்பந்தத்துடன் தடைதாண்டி பயணம் தொடர உறுதிகுலையா போராளிகள் இன்னும் இன்னும் வந்துகொண்டே இருப்பர்..

உமாநாத் வயது 93 . கல்லூரி காலம் தொட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டவர் . லட்சிய உறுதி குன்றா அவரின் வாழ்க்கை வரலாற்றை 2000 ஆண்டில் நான் எழுதிய தருணங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது . அந்நூலின் “ அர்த்தமுள்ள வாழ்வு ” என்ற கடைசி அத்தியாயத்திலிருந்து சில பத்திகள் கீழே ...

நாட்டுக்காக சமூகத்திற்காக உழைப்பாளி வர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்ட உன்னத கம்யூனிச லட்சியங்களுக்காக ..

* 9 ஆண்டுகள் 6 மாதங்கள் ஆக மொத்தமாக 3465 நாட்கள் சிறையில் வாடினார் ..

* 7 ஆண்டுகள் அதாவது 2555 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்துள்ளார் ..

* தலைமையேற்ற போராட்டக் களங்கள் , உண்ணாவிரதங்கள் , சந்தித்த தாக்குதல்கள் .. அளவிலடங்கா ..

* சுமார் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் பல லட்சம் மணி நேரம் மக்களுக்காகப் பேசி இருக்கிறார் . அவர் குரல் நாடாளுமன்றம் , சட்டமன்றம் ,ஆலைவாயில் , தெருமுனை , வீதிகள் , கருத்தரங்குகள் ,பேரவைகள் , மாநாடுகள் , குழுக்க்கூட்டங்கள் என ஒலித்தது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராளி குரலாய் ஒலித்தது .

* 7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் .

* தன் வாழ்நாளில் சோவியத் யூனியன் , மக்கள் சீனம் , ருமேனியா , பல்கேரியா , ஆஸ்திலேரியா , ரோமாபுரி , யுகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்தார் .

* கட்சி உறுப்பினராய் தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராய்த் உயர்ந்தார்.

இப்படி கம்ப்யூட்டரில் அவரைப் பற்றி புள்ளிவிவரங்கள் தொகுக்கலாம் . உமாநாத் அதில் மட்டும் வாழவில்லை .

தான் ஏற்றுக் கொண்ட சோஷலிச லட்சியத்தை உடனடியாக அடைய முடியாது . நீண்ட நாள் ஆகும் . உழுவதும் , விதைப்பதும் , களை எடுப்பதும் , உரமடிப்பதுமே தம்பணி . அறுவடைப் பலன் அடுத்த தலை முறைக்கு உரியது .

ஒரு வேளை இன்னொரு தலைமுறையோ , இரண்டு தலைமுறையோகூடக் காத்திருக்க நேரிடலாம் . நம்பிக்கை கீற்றை நோக்கி சோர்வின்றி பயணப்பட தெளிந்த சிந்தனையும் - திடங்கொண்ட நெஞ்சமும் - பார்வையில் புதுமையும் - பயணத்தில் உறுதியும் வேண்டும் . அந்த லட்சியக் கனவுகளுக்காக நிகழ்கால வாழ்வை மெழுகுவர்த்தியாய் எரித்துக் கொள்ளவேண்டும் . வெற்றிப் புன்னகைக்காக தலைமுறை தலைமுறையாய் தவம் நோற்க வேண்டும் . அர்ப்பணிப்பின் முழுப்பொருளே அந்த “ லட்சிய தவத்தில் ” அன்றோ உள்ளது .

[ இந்த வரிகள் இன்று எழுதியதல்ல 2000 ல் எழுதியது . தோழர் ஆர் . உமாநாத்தின் ஒப்புதலோடு எழுதப்பட்ட வரிகள் .இன்றும் பொருந்துகிறது . ]

தோழர் . ஆர் .உமாநாத் என்கிற மனிதனின் - தோழனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் - லட்சியதவ வாழ்வாய் - பார்வை புதிதாய் - பயணம் நெடிதாய்..

இந்த நொடிவரை தொடர்ந்தது .

இனி நாம் தொடர்வோம் !

-      fr.thanks to  சு.பொ.அகத்தியலிங்கம் .

Sunday, 18 May 2014

வாழ்த்துக்கள்



ANNOUNCEMENT OF SR.TOA(G) SCREENING TEST RESULT-EXAM HELD ON 30.03.2014
Read | Download

30.03.2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான 
தகுதி தேர்வின் (SCREENING TEST) முடிவுகள் 
 13.05.2014 மாநில நிர்வாகத்தால் 
வெளியிடப்பட்டது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு திருநெல்வேலி 
 மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

Saturday, 17 May 2014

தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்திகள் என்ன?




தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்திகள் என்ன?

போட்டி யார் யார்க்கு ?
             உலகமே எதிர்பார்த்த 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றன. வெளித்தோற்றத்தில் காங்கிரஸ், பாஜக அணிகளுக்கிடையேயான மோதல் போலத் தெரிந்தாலும், அடிப்படையில் இது நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் பெருமுதலாளித்துவ அணிக்கும், உழைக்கும் வர்க்க அணிக்கும் இடையேயான போட்டிதான். வெவ்வேறு கட்சிகளாக நின்றாலும், உண்மையில் அந்த மகா சுரண்டல் சக்திகளுக்கு சேவை செய்வதில் முதல் படிக்கட்டில் இருப்பது யார் என்ற போட்டிதான் அந்த அணிகளின் கட்சிகளுக்கிடையே நடந்தது. உழைக்கும் மக்களுக்காக இடதுசாரி கட்சிகள் களம் கண்டன..
ஒருவன் தவறு     அடுத்தவன் வெற்றி      
          காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள் பாஜகவுக்கு உதவியுள்ளன என்பதே உண்மை. பொருளாதார நிபுணர்மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் வகையறா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் கைபபாவையாக செயல்பட்டனர்.  அவர்களுக்கு தொண்டாற்றுவதே லட்சியமாக கொண்டிருந்தனர். அவர்கள் திணித்த பொருளாதாரக் கொள்கைகளின் நாசகர விளைவுகளால் எளிய மக்கள் பெருந்துயரங்களையே சந்திக்க வேண்டியதாயிற்று. குறையாத விலைவாசி, பெருகாத வேலைவாய்ப்பு, ஓயாத தொழில் நெருக்கடி, மீளாத விவசாய வீழ்ச்சி, நியாயமற்ற கல்வி வியாபாரம் என பல சுமைகளை சுமக்க வேண்டியதாயிற்று.
 பின்னணியில் யார் ?
          நரேந்திர மோடி என்ற தனிமனிதர் அனைத்தையும் மாற்றிப்போட அவதாரம் எடுத்திருப்பதான மாயையை அதே கார்ப்பரேட் சக்திகள் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து உருவாக்கி வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், மன்மோகனை பிரதமராக்கிய நோக்கம் ஓரளவுக்கு நிறை வேறியிருக்கிறது- பொதுத்துறைகள் சீர்குலைப்பு, பெட்ரோலிய விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளிடமே விடுவது, அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவு திறப்பு, ஓய்வூதியத்தைப் பங்குச் சூதாட்டமாக்குவதற்கான வழி போன்ற சில அடிப்படை யான ஏற்பாடுகளை ஐ.மு.கூ. அரசு விசுவாச மாகச் செய்துகொடுத்தது.   இதையடுத்து, மேன்மேலும் தங்குதடையற்ற சுரண்டலுக்கு ஏதுவாக, மக்களின் ஆவேசத் தைத் திசைதிருப்பக்கூடியவராக மோடியை முன்னிறுத்தினார்கள். கார்ப்பரேட் உலகம்தான் இதைத் தீர்மானிக்கிறது என்பதற்கு ஒரே சான்று, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என வெளியிடத் தொடங்கியதிலிருந்தே பங்குச் சந்தைப் புள்ளி மிக உச்சத்திற்குச் சென்றதுதான். முன்பு மன்மோகன் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரத்திலும் இதுதான் நிகழ்ந்தது.


உலக நிகழ்வுகளில் ஒரு பகுதி
           உலகின் பல பகுதிகளில் மதவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிலைப்படுத்துகிற வலதுசாரி சக்திகள் அரசியலில் ஆதிக்கம் பெறுகின்றன. அதன் பிரதிபலிப்பாகவே இந்தியாவில் நிகழ்வதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
காத்திருக்கும் கடமைகள்
          மதச்சார்பின்மை, சமூகநீதி, பாலின சமத்துவம், கருத்துச் சுதந்திரம், தொழிலாளர் நலன்கள்,சிறு தொழில்கள் பாதுகாப்பு, உறுதியான வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என அனைத்துத் தளங்களிலும் நெடும் போராட்டங்கள் காத்திருக் கின்றன.
         மக்கள் இயக்கங்களுக்கு - குறிப்பாக தொழிலாளி வர்க்கத்திற்கு - வரலாறு விடுத்துள்ள கடமை இது. உண்மைகளை மக்கள் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டிய பொறுப்போடும் இணைகிற கடமை அது.
சவாலே சமாளி
                விற்பதற்காகவே BSNL   நிறுவனத்தை உருவாக்கிய  அதே பிஜேபி அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது. BSNL ஊழியன் என்ற முறையில் நிறுவனத்தை பாதுகாக்கும் கடமை முன் எப்பொதும இல்லாத அளவு நம் மீது சுமத்துப்பட்டுள்ளது. சவாலை சமாளிப்போம்



Thursday, 15 May 2014

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.



பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.

வங்கிகள் தேசிய மயமாக்கல் மூலம் நாடு அடைந்தமுன்னேற்றத்தை முடக்குவதற்காக மீண்டும்பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கிடும்இந்திய ரிசர்வ் வங்கிமத்திய அரசின்நடவடிக்கைகளை இந்திய வங்கி ஊழியர்கள்சம்மேளனம் வன்மையாகக்கண்டித்துள்ளது.இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்சம்மேளனம் - தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே எதிர்நோக்கி இருக்கும்போதுஇந்திய ரிசர்வ் வங்கி நியமனம் செய்த ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பி.ஜே.நாயக் தலைமையிலானபொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் குழு அறிக்கையை நாயக் வெளியிட்டுள்ளார்இந்தநடவடிக்கைக்கு சாதகமாக 1970, 1980 வங்கி தேசியமயமாக்கல் சட்டங்கள் மற்றும் பாரத ஸ்டேட்வங்கிபாரதஸ்டேட் வங்கிதுணைவங்கிகள் சட்டங்களைரத்துசெய்வதற்கு பரிந்துரை செய்கிறது.இந்திய வங்கி ஊழியர்சம்மேளனம்-தமிழ்நாடு பி.ஜே.நாயக் குழு பரிந்துரைகளை கடுமையாக எதிர்க்கிறது.
திரும்பத் திரும்ப மத்தியில் ஆளும் கட்சிகளும்இந்திய ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனநவீன தாராளமயக் கொள்கைகளின் மீது முக்கியமுனைப்புக் காட்டும் ரகுராம் ராஜன்இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றபின்புஇதன் வேகம்பன்மடங்கு தீவிரமாகியுள்ளது.1969 ல் தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு, 1947முதல் 1969 வரை 500 தனியார் வங்கிகள் திவாலாகியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வளவு ஏன், 1969 க்குப் பின்னும் கூட 25 தனியார் வங்கிகள் திவாலாகினஇதன் சுமையை பொதுத்துறைவங்கிகளே தாங்கிக் கொண்டனபொருளாதார நெருக்கடி வெடித்தபோதுசெப்டம்பர் 2008 முதல்,அமெரிக்காவில் 450 தனியார் வங்கிகள் வீழ்ச்சியடைந்தன.1970 தேசிய மயமாக்கல் சட்டமே அதன் பீடிகையில்என்ன கூறுகிறதுதனியார் வங்கிகள் அவற்றின் உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவேதொண்டாற்றுகின்றனஉணவுப் பாதுகாப்புவேலை வாய்ப்புவட்டார சமனற்ற தன்மையை போக்குவதுஆகிய தேசிய நலன் காக்கும் முன்னுரிமைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே இவைதேசியமயமாக்கப்பட்டன.பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கல் என்பது இந்திய ரிசர்வ் வங்கி,அரசின் பாமரனை உள்ளடக்கிய நிதிக் கொள்கைகளுக்கே முரணானதுதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்தனியார் மயமானால்கோடிக்கணக்கிலுள்ள விளிம்பு நிலை மாந்தர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தவழங்கப்பட்ட கடன் முன்னுரிமை துறைகள் கைவிடப்படும்நிறுவன ரீதியான கடன் வழங்கப்படாததாலேயேகடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமானது.
கல்விக்கடன் வழங்கப்படாவிட்டால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடும்சிறு,குறு வர்த்தகக்கடன் நிறுத்தப்பட்டால்லட்சக்கணக்கான வேலைவாய்ப்பும் அழியும்.பெபி-தமிழ்நாடுமக்கள் பணம் மக்கள் நலனுக்கே என்பதற்காகவே நிற்கிறதுரிசர்வ் வங்கிஅரசு எடுக்கும் தனியார் மயக்கொள்கை பாமரன் நலனுக்குஎதிரானது.