1975
ஆண்டு
துவக்கத்தில் தபால் தந்தி துறையில்
தொலைபேசி
இயக்குனராக பணியில் சேர்ந்து
தொழிற்சங்க
இயக்கத்தில் NFPTEயில் இணைந்து
அமரர் தோழர் K.G. போஸ் வழி காட்டலில் இயங்கி
தோழர் C.S .பஞ்சாபகேசன் போட்ட பாதையில் நடந்து
தொலைதொடர்பு
துறைதொழிற்சங்கங்களில்
சீர்திருத்தவாத
தலைமைக்கு எதிராக போராடி,
சங்கத்தில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலை நிறுத்தி BSNLலில் BSNLEUவை உருவாக்கி
ஊழியர்கள் வாழ்வில் மேம்பாடு அடைந்திட அல்லும் பகலும் பாடுபட்டு நிறைவான
ஊதியம் பெற்றுத் தந்து,
பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கி தனியார்மயத்தை தடுத்திட்ட மாமனிதர் தோழர் P. அபிமன்யு அவர்கள் இன்று ஒய்வு பெறுகிறார்.
கடலூர் மாவட்ட்த்தில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளிலும்,
தர்போது பாண்டிச்சேரியில்
பணியாற்றி, நமக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் இன்று நிறுவனப் பணியில் இருந்து
ஒய்வு பெறுகிறார்.
பெற்ற உரிமைகளை போற்றி பாதுகாத்திட அவர் பணி தொடரட்டும்..
அவர் நீடுழீ வாழ்க! வாழ்க!! என்று இந்நாளில் நமது திருநெல்வேலி மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
பணி ஓய்வு
இன்று (31-12-2013) பணி ஓய்வு பெறும் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .